நியூ இயர் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்.. நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நியூ இயர் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்.. நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!

நியூ இயர் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்.. நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!

Malavica Natarajan HT Tamil
Jan 01, 2025 02:28 PM IST

இயக்குநர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் கொடுத்துள்ளார்.

நியூ இயர் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்.. நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!
நியூ இயர் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்.. நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த விடை!

ஹீரோயிசம் இல்லாத ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதை ரவிகிருஷ்ணா தனது நடிப்பின் மூலம் வாழ்ந்து காட்டியிருப்பார். தன்னை சுற்றி சுற்றி வரும் இளைஞனை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல், ஏற்றுக் கொண்டபின் அவனை வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்கும் பெண்ணாக அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார் சோனியா அகர்வால்.

செல்வராகவன்

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற வித்தியாசமான ஒரு காதல் கதையை திரைப்படமாக எடுத்து தனது இயக்குநர் பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர், தனது தம்பி மற்றும் மனைவியை வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை எடுத்திருப்பார்.

முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கதையால் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த அவர், இரண்டாவது படமாக உருவாக்கியது தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்திருந்தாலும் அப்படத்திற்கான ரசிகர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்தப் படத்தை, இப்போதுள்ள இளைஞர்களும் ரசிக்கும் படியாக எவர்கிரீனாக இயக்கி இருப்பார் செல்வராகவன்.

7ஜி ரெயின்போ காலனி 2

7ஜி ரெயின்போ காலனி வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு , இந்த புத்தாண்டு தினத்தன்று படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். வீடுகள் நிறைந்த கட்டிடங்களால் சூழப்பட்ட தெருவில் இரவில் ஒளிரும் தெரு விளக்கின் வெளிச்சத்தில் ஆணும் பெண்ணும் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தார். மேலும், இது 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ட்ஸ் லுக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படக்குழு

போஸ்டரில் உள்ள தகவல் படி, 7ஜி ரெயின்போ காலனி 2 படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம். ரத்னம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் மீண்டும் இயக்குநர் செல்வராகவன் கை கோர்ப்பது உறுதியாகியுள்ளது.

நடிகர்கள் யார்?

7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சோனியா அகர்வால் விபத்தில் சிக்கி உயிரிழந்தது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இருந்தாலும் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகிகள் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

12 ஆண்டுக்கு பின் மீண்டும் தமிழ் படம்

7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதாநாயகனாக அறிமுகமான ரவி கிருஷ்ணா, இந்தப் படத்தை தொடர்ந்து கேடி, சுக்கரன், பொன்னியின் செல்வன், காதல்னா சும்மா இல்ல, ஆரண்ய காண்டம் படங்களில் நடித்தார்.

இறுதி கட்டத்தில் படப்பிடிப்பு

ஆரண்ய காண்டம் படத்திற்கு பின் இவர் தமிழ் படங்களில் நடிக்காத நிலையில் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகிறது. ஆனால், இப்போது வரை இயக்குநர் செல்வராகவன் இதுகுறித்த தகவல்களை பாதுகாப்பாக வைத்துள்ளார்.

சினிமா வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்ப படி, செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளார் எனவும் விரைவில் படம் வெளியாகும் எனவும் தெரிகிறது. 12 ஆண்டுக்குப் பின் நடிக்க வரும் ரவி கிருஷ்ணா 7ஜி ரெயின்போ காலனிக்காக தனது உடல் எடலை வெகுவாக குறைத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.