Director Selvamani: ‘அவர யாரும் கட்டாயப்படுத்தி கூப்பிடல.. ஆனா மேடைக்கு வந்த அவரு.. கலைஞர் மட்டும்..’ - செல்வமணி!
Director Selvamani: விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது - செல்வமணி!

2010ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் சார்பில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த அந்த விழாவில், பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஆனால், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அஜித்குமார் தன்னை நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அழைத்ததாக குறிப்பிட்டு, மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். இதனை பாராட்டும் வகையில், ரஜினி எழுந்து நின்று கைதட்டினார். இது மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னர் அஜித் கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்து, அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து அந்த நிகழ்ச்சியை இயக்கிய இயக்குநர் செல்வமணி தமிழ் நாடு நவ் சேனலுக்கு கடந்த வருடங்களுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
மனஸ்தாபம் உண்மையே
இது குறித்து அவர் பேசும் போது, “அவருக்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அது கலைஞருக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில், அஜித் மேடையில் அவரை, அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வற்புறுத்தி அழைத்ததாக, கொந்தளித்து பேசி இருந்தார். உண்மையில், நாங்கள் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை.
அப்போது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில்தான் அவர் படங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது விநியோகஸ்தர்களுக்கும் அஜித்திற்கும் ஏதோ பிரச்சினை என்று செய்தி இருந்தது. அப்போது, விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது.” என்று பேசினார்.
கே.ஜி.எஃப் - 3 யில் அஜித்குமார்
முன்னதாக, கே.ஜி.எஃப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்தான செய்தியை, தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில பிரிவான டிடி நெக்ஸ்ட் வெளியிட்டு இருந்தது.
அது தொடர்பாக வெளியான செய்தியில், “சலார் படத்தின் பாகங்களை முடித்த பின்னர், பிரசாந்த் நீல் அஜித்துடன் இரு திரைப்படங்களில் இணைய இருக்கிறார். இது அஜித்தின் 64 மற்றும் 65 படங்களாகவோ அல்லது 65 மற்றும் 66 ஆவது படங்களாகவோ இருக்கலாம்.
அஜித்தும், இயக்குநர் பிரசாந்த் நீலும் கடந்த மாதம், விடாமுயற்சி படப்பிடிப்பின் பிரேக்கில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பிரசாந்த், அஜித்தின் 3 வருடத்திற்கான கால் சீட்டுகளை கேட்டு இருக்கிறார். அவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக இருக்கும் அந்தப்படமானது, அஜித்தின் 64 வது படமாக இருக்கலாம். இது பிரசாந்த் நீலின் முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், தனித்திரைப்படமாக இருக்கும். இந்தப்படத்திற்காக 2025ம் ஆண்டு படப்பிடிப்பிற்கு செல்லும் படக்குழு, 2026ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
யாஷூடன் அஜித்
இவர்கள் இணையும் இரண்டாவது திரைப்படம் அஜித்தின் 65 அல்லது 66 வது திரைப்படமாக இருக்கலாம். இந்தப்படம் பிரசாந்த் நீலின் யூனிவர்சிற்குள் வரும். அது கே.ஜி.எஃப் 3 - ஆக அமைய இருக்கிறது. அந்தப்படத்தில், யாஷூடன் இணையும் அஜித்திற்கு, படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் இறுதியில், அஜித் மற்றும் யாஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெறும். இந்தப்படங்களை முன்னதாக கே.ஜி.எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னதாக, தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதற்கிடையே அவர் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்