"வர்றவன் போறவன் எல்லாம் அடிக்குறான்.. பொங்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கு!" நிஜத்தை அறைந்து சொன்ன டைரக்டர்
சமூகத்தில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளைக் கண்டு பொங்கி எழாத நாம் 3 மணி நேர படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்மறை கருத்துகள் வருகின்றன என இயக்குநர் ரா. சரவணன் கேள்வி எழுப்புகிறார்.

கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. இவை, படம் குறித்த கருத்துகளாக இல்லாமல் தனிமனித தாக்குதலாகவும் இருந்தது. இவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நெகட்டிவ் கருத்துகள் குறித்து நடிகை ஜோதிகா, இயக்குநர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், நந்தன் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் எதிர்மறை கருத்துகளை வெளிப்படுத்துவோருக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இதுபோன்ற கருத்து தெரிவிப்பவர் திரைப்படம் என்றால் பொங்குவதும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளில் சாதுவாக மாறிவிடுவதுமாக உள்ளனர் என விமர்சித்தும் உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதுகுறித்து பார்ப்போம்
கண்டும் காணாமல் கடக்கிறோம்
கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர்.