Guna Kamal haasan: குணா டப்பிங்கில் ஜனகராஜ் செய்த வாக்குவாதம்;அடித்து ஓட விட்ட சந்தான பாரதி; காலத்திற்கும் ஒதுக்கிய கமல்
குணா படத்தின் டப்பிங் ஏவிஎம் கார்டன் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. நான் ஜனகராஜுக்கு டப்பிங் பேசுவதற்காக டயலாக் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தேன். என் பின்னால் சந்தான பாரதியும்,ஆர்எஸ் சிவாஜியும் இருந்தார்கள்.
குணா திரைப்படம் உருவாக்கத்தின் போது சந்தான பாரதிக்கும், ஜனகராஜிற்கும் இடையே நடந்த சண்டை குறித்தும், அதற்கு கமல் ஆற்றிய எதிர்வினை குறித்தும் அந்தப்படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்த ராசி அழகப்பன் வாவ் தமிழா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “மிக நெருங்கியவர்களின் நட்பானது ஒரு சிறிய வார்த்தையில் முறிந்து விடக் கூடியதுதே. ஜனகராஜ் தன்னை ஆங்கில படங்களை பார்த்து வளர்த்துக் கொண்டவர். அவர் நல்ல ஹிட்டாரிஸ்டும் கூட..
அவர், கமல் சார் என எல்லோரும் ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்தது. இணைந்து கிரிக்கெட்டெல்லாம் கூட விளையாடி இருக்கிறார்கள். அந்த நட்பின் வாயிலாக அவருக்கு அறிமுகம் ஆனவர்தான் சந்தான பாரதி.
குணா படத்தின் டப்பிங் ஏவிஎம் கார்டன் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. நான் ஜனகராஜுக்கு டப்பிங் பேசுவதற்காக டயலாக் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தேன். என் பின்னால் சந்தான பாரதியும்,ஆர்எஸ் சிவாஜியும் இருந்தார்கள்.
ஒரு டயலாக்கை ஜனகராஜ் பேசும் பொழுது, நான் அதை ஓகே செய்து விட்டேன். ஆனால் ஆர் எஸ் சிவாஜி ஒன் மோர் கேட்டார். ஆனால் நான் ஓகே சொன்னதால், ஜனகராஜ் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
சிவாஜியோ இல்லை இல்லை மறுபடியும் பேச வேண்டும் என்று சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதில் தடித்த வார்த்தை ஒன்று வெளிவந்துவிட்டது.
இதையடுத்து ஜனகராஜ் வெளியே வர, அவரை நோக்கிச் சென்ற ஆர்.எஸ்.சிவாஜி அவரை அடித்து விட்டார். சந்தான பாரதியும் உடன் சேர்ந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ஜனகராஜ் ஓட ஆரம்பித்து விட்டார். இந்த தகவல் கமல் சாருக்கு தெரிந்தது. அவர் மிகவும் வருத்தப்பட்டார். அந்த பிரச்சினை யூனியன் பிரச்சினையாக மாறியது.
இதனையடுத்து பிரச்சினை சங்கத்திற்கு செல்ல, ஒரு வழியாக பேசி முடித்து வைக்கப்பட்டது. ஆனால் ஜனகராஜ் தன்னுடன் ராசி அழகப்பன் மட்டுமே இருக்க வேண்டும், வேறு யார் இருந்தாலும் டப்பிங் பேச மாட்டேன் என்று சொல்ல, அதற்கு நாங்கள் கட்டுப்பட்டோம். இந்த விஷயத்தில் கமல் சாருக்கு கடுமையான மனக்கசப்பு வந்து விட்டது. அதன் பின்னர் ஜனகராஜ் கமல் சார் படங்களில் இல்லாமலேயே சென்று விட்டார்.” என்று பேசினார்
டாபிக்ஸ்