தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Director Rasi Azhagappan Latest Interview About How To Be Kamal Haasan Find Guna Cave For Guna Movie

Kamal Haasan: ஆபத்தை நோக்கி செல்ல வைத்த கலைவெறி.. 25 நொடிகள் ட்ராவல் செய்த கல்.. குணா குகையை கமல் கண்டுபிடித்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 03, 2024 06:16 AM IST

முதலில் குணசீலம் என்ற பகுதியில் படத்தை எடுக்க முடிவு செய்து பின்னர் அந்த லொக்கேஷன் கொடைக்கானலுக்கு மாறியது. கமல் சார் நான், சந்தான பாரதி உள்ளிட்டோர் லொக்கேஷன் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்று இருந்தோம்.

குணா குகையை கமல் கண்டுபிடித்த கதை!
குணா குகையை கமல் கண்டுபிடித்த கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்கு பிறகு, எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வது போல ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று கமல் நினைத்தார். 

எப்போதுமே கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் முடிந்த பின்னர், கமலை அனந்து அழைத்து பேசுவது வழக்கம். அந்த வகையில்தான் அப்போதும் அனந்து கமலை அழைத்திருந்தார். 

அவரிடம் அடுத்தப்படம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது அனந்துதான் கடவுள் மீது ஒரு பக்தன் எவ்வளவு முரட்டுத்தனமான பக்தியோடு இருப்பானோ, அதே போன்று ஒரு கதாபாத்திரம் தன்னுடைய காதலியை பார்த்தால் எப்படி இருக்கும் என்று சொன்னார். கதை நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இதுதான் கதை என்று முடிவு செய்தோம். 

லொக்கேஷன் பற்றி பேசும் போது கதாபாத்திரம் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல இருப்பதால், குளிர் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்தோம். 

முதலில் குணசீலம் என்ற பகுதியில் படத்தை எடுக்க முடிவு செய்து பின்னர் அந்த லொக்கேஷன் கொடைக்கானலுக்கு மாறியது. கமல் சார் நான், சந்தான பாரதி உள்ளிட்டோர் லொக்கேஷன் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்று இருந்தோம். 

அங்கு ஒரு முஸ்லிம் டிரைவர்தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். லொக்கேஷன் பார்த்துக்கொண்டே சென்ற போது, திடீரென ஒரு இடத்தில் சடாரென்று நில்லுங்கள் அங்கே செல்லாதீர்கள். விழுந்தால் எலும்பு கூட கிடைக்காது என்று அந்த ட்ரைவர் எச்சரித்தார். 

அவர் சொன்னவுடன் அங்கிருந்து எல்லோரும் சென்றுவிடலாம் என்று கிளம்ப, கமல் சார் மட்டும் கிளம்பவில்லை. கமல் சாரை பொருத்தவரை யாராவது ஒன்று முடியாது என்று சொன்னால், அதை அவருக்கு முடித்து காட்ட வேண்டும்.

அவர் அந்த ஆபத்தான இடத்தை நோக்கி சென்றார். உள்ளே எட்டிப்பார்த்தால் கும்மிருட்டுடாக இருந்தது. கமல் சார் ஒரு கல்லை எடுத்து உள்ளே போட்டார். அந்த கல் 25 நொடிகள் டிராவல் செய்து அந்த குகைக்குள் சென்று விழுந்தது. 

இதனையடுத்து கமல்ஹாசன் அந்த முஸ்லிம் டிரைவரிடம் குகை மிகப்பெரியதாகதான் இருக்கிறது. ஆனால் நாம் அதன் தரையை தொட்டு படம் எடுப்போம் என்றார். அதனைக்கேட்டு அவன் அதிர்ந்து போனான். 

முதற்கட்டமாக குணா குகையின் வெளியே ஒரு பாலம் போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் கயிறு கட்டினோம். கயிறைப்பிடித்து எல்லோரும் உள்ளே இறங்க பயந்த போது, கமல் சார்தான் முதல் ஆளாக உள்ளே இறங்கினார். அதன் பின்னர்தான் நாங்கள் உள்ளே இறங்கினோம். ” என்று பேசினார். 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்