Game Changer Box Office: அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைன்னா? கேம் சேஞ்சரை கலாய்த்த டைரக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Game Changer Box Office: அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைன்னா? கேம் சேஞ்சரை கலாய்த்த டைரக்டர்

Game Changer Box Office: அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைன்னா? கேம் சேஞ்சரை கலாய்த்த டைரக்டர்

Malavica Natarajan HT Tamil
Jan 14, 2025 05:48 PM IST

கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் வசூல் பொய்யானது என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

Game Changer Box Office: அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைன்னா? கேம் சேஞ்சரை கலாய்த்த டைரக்டர்
Game Changer Box Office: அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைன்னா? கேம் சேஞ்சரை கலாய்த்த டைரக்டர்

கேம் சேஞ்சர் வசூல் சர்ச்சை

ஷங்கர் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதையை மையப்படுத்தி வெளியான திரைப்படம். இருப்பினும், கேம் சேஞ்சரின் வசூல் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. படக்குழுவினர் வசூல் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுவதாக சமூக ஊடகங்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மூத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா கேம் சேஞ்சர் படத்தை குறிவைத்து தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

பொய்யான வசூல்?

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.186 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. வசூல் எண்ணிக்கையை வேண்டுமென்றே அதிகமாகக் காட்டுவதாக சில நெட்டிசன்கள் விமர்சித்தனர். ராம் கோபால் வர்மாவும் இன்று (ஜனவரி 13) ட்விட்டரில் அந்த வசூல் பொய்யானது என்று பதிவிட்டுள்ளார். பொய் சொல்லும்போது, அது நம்பும்படியாக இருக்க வேண்டும் என்றும் கிண்டலாகக் கூறியுள்ளார்.

கேம் சேஞ்சருக்கே இப்படின்னா!

கேம் சேஞ்சர் முதல் நாளில் ரூ.186 கோடி வசூலித்திருந்தால், கேம் சேஞ்சர் புஷ்பா 2 முதல் நாளில் ரூ.1860 கோடி வசூலித்திருக்க வேண்டும் என்று கிண்டலாகக் கூறியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தை ஜிசி என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஜிசி படத்திற்கு ரூ.450 கோடி செலவாகியிருந்தால், அற்புதமான காட்சிகளைக் கொண்ட ஆர்ஆர்ஆர் படத்திற்கு ரூ.4,500 கோடி செலவாகியிருக்க வேண்டும்.

கிண்டல் பதிவு

ஜிசி முதல் நாளில் ரூ.186 கோடி வசூலித்திருந்தால், புஷ்பா 2 முதல் நாளில் ரூ.1860 கோடி வசூலித்திருக்க வேண்டும். உண்மையில், அடிப்படைத் தேவை என்னவென்றால், நம்பும்படியாக இருக்க வேண்டும். ஜிசியைப் பொறுத்தவரை, அந்தப் பொய் இன்னும் நம்பும்படியாக இருக்க வேண்டும்” என்று ராம் கோபால் வர்மா தனது வழக்கமான கிண்டலுடன் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் கேம் சேஞ்சர் படத்தின் பட்ஜெட் மற்றும் முதல் நாள் வசூல் எண்ணிக்கை சரியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற படங்களின் வெற்றிக்கு அவமானம்

எஸ்.எஸ். ராஜமௌலி, சுகுமார் போன்றவர்கள் பாலிவுட்டை உண்மையிலேயே அசைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, கேம் சேஞ்சர் குழுவினர் தென்னிந்தியர்கள் மோசடியிலும் சிறந்து விளங்குவதாக நிரூபிப்பத்துள்ளனர் என ராம் கோபால் வர்மா ட்வீட் செய்துள்ளார். “ராஜமௌலி, சுகுமார் ஆகியோர் உண்மையான வசூல் எண்ணிக்கையுடன் தெலுங்கு சினிமாவை உயர்த்திக் காட்டியுள்ளனர். பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

மோசடியிலும் சிறந்து விளங்கும் தென்னிந்தியா

தென்னிந்திய சினிமா மோசடியிலும் சிறந்து விளங்குவதாக கேம் சேஞ்சர் படத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நிரூபிக்கின்றனர். பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, காந்தாரா போன்ற படங்களின் அற்புதமான வெற்றிகளைக் குறைத்து மதிப்பிடும் இந்த அவமானகரமான செயலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று ராம் கோபால் வர்மா எழுதியுள்ளார். நம்ப முடியாத பொய்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நிச்சயம் தில் ராஜு இல்லை

அத்துடன் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு இதன் பின்னணியில் இருக்க மாட்டார் என்றும், அவர் மோசடி செய்ய மாட்டார் என்றும் ராம் கோபால் வர்மா நம்பிக்கையுடன் தன் கருத்துகளை எழுதியுள்ளார்.

காலில் விழ வேண்டும்

புஷ்பா 2 படம் தனக்குப் பிடித்திருந்தது என்றும், ஆனால் கேம் சேஞ்சரைப் பார்த்த பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் ஆகியோரின் காலில் விழ வேண்டும் என்று தோன்றுகிறது என்றும் ராம் கோபால் வர்மா மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளார். இவ்வாறு ராம் கோபால் வர்மா, புஷ்பா படத்தை பெருமைபடுத்தி கேம் சேஞ்சர் படத்தை குறிவைத்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.