Actor Dhanush: தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Dhanush: தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை என்ன தெரியுமா?

Actor Dhanush: தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை என்ன தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Feb 24, 2025 08:00 AM IST

Actor Dhanush: நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகவுள்ள D55 படத்தின் கதை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Actor Dhanush: தனுஷ்-  ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை என்ன தெரியுமா?
Actor Dhanush: தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை என்ன தெரியுமா?

D55 அப்டேட்

இந்நிலையில், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து இயக்கும் இன்னும் பெயரிடப்படாத D55 படம் குறித்த அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் FICCI நிகழ்ச்சியில் பேசிய போது, தனுஷ் 55 படம் பற்றி உங்களுக்கு என்ன கருத்து சொல்ல தோன்றுகிறதோ அதை சொல்லலாம் என தொகுப்பாளர் கூறினார்.

எந்த ஐடியாவும் இல்லை

அப்போது பேசிய ராஜ்குமார் பெரியசாமி, இந்தப் படத்தில் பெரிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவரின் நடிப்புத் திறன் அபரிவிதமாக இருக்கும். அவரின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்தப் படம் இருக்கும். இந்தப் படம் அவருக்காக தயாரிக்கப்பட்டது இல்லை.

அந்த நடிகர் தனுக்கு கதை தேர்ந்தெடுப்பதிஸ் அதிக சுதந்திரம் கொடுத்தார். நான் முதல் முறை அவரை சந்திக்கும் போது படம் குறித்தும், எந்த கதைக்களத்தில் படம் பயணிக்கிறது என்பது குறித்தெல்லாம் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.

இது ஒரு உண்மை கதை

பின் நான் அவரை சந்தித்த போது அவர் எனக்கொரு கம்போர்ட் ஜோன் கொடுத்தார். அவர் எந்தக் கதையாக இருந்தாலும் நடிக்க தயாராக இருந்தார். தன்னை ஒரு கதாப்பாத்திரத்திற்குள் மட்டும் பொருத்திப் பார்க்க அவர் தயாராக இல்லை. இந்த கதையைத் தான் செய்வேன், இந்த கதையில் நான் நடிப்பேன். இதில் நடிக்க மாட்டேன் என சொன்னதே இல்லை.

இப்படி எந்த கண்டீஷனும் இல்லாததால், என்னால் 2 கதைகளை உருநவாக்க முடிந்தது. அடுத்த முறை சந்தித்த போது 2 கதைகளையும் சொன்னேன் இரண்டும் அவருக்கு பிடித்திருந்தது. அதிலிருந்து அவர் ஒரு கதையை தேர்ந்தெத்தார். அது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை எனக் கூறினார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்

தனுஷ் இயக்த்தில் வெளியாகி தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா, பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களும் சரண்யா பொன்வண்ணன், சரத்குமார் போன்ற உச்ச நடிகர்களும் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 2கே கிட்ஸ் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இட்லி கடை

இதைத் தொடர்ந்து, தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், அருண் விஜய் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் வேலைகளில் தனுஷ் தீவிரம் காட்டி வருகிறார். இதனால், அழர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.

தேரே இஸ்க் மெயின்

இதைத் தொடர்ந்து அவர் ஆனந்த் எல், ராய் இயக்கத்தில் தேர் இஸ்க் மெயின் எனும் இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். டெல்லியில் நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் லீக்காகி வைரலானது. தனுஷ் இதற்கு முன் ஆனந்த். எல் ராயுடன் இணைந்து அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.