‘விடுதலை படத்த சென்சார் போர்டு எப்படி விட்டதுன்னே தெரியல’.. ராஜீவ் மேனன் ஷேரிங்ஸ்
விடுதலை படத்தின் கதையை பார்த்தும் சென்சார் போர்ட்டு இந்தப் படத்தை எப்படி திரையிட அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை என இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் போன்ற சில படங்களையே இயக்கி இருந்தாலும் அத்தனை படத்திலும் தனது முத்திரையை பதித்திருப்பவர் ராஜீவ் மேனன். சினிமா ஒளிப்பதிவாளரான இவர், பல விளம்பரப் படங்களையும் எடுத்துள்ளார்.
ரோஜா வாய்ப்பை மறுத்த ராஜீவ் மேனன்
1990களில் மெகாஹிட் படமான ரோஜாவில் அரவிந்த் சாமி கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க முதலில் ராஜீவ் மேனனுக்கு தான் இயக்குநர் மணிரத்னம் அழைப்பு விடுத்தாராம். ஆனால், அவர் நடிக்க மாட்டேன் எனக் கூறிய பிறகே அந்த கேரக்டருக்கு அரவிந்த் சாமி நடித்திருப்பார்.
ரோஜா படத்தின் கதாநாயகன் கேரக்கடரே வேண்டாம் என்று சொன்னவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றும் அளித்துள்ளார். அதில் தான் ஏன் வெற்றி மாறன் படத்தில் நடித்தேன் என்றும் கூறியுள்ளார்.
பேசி பேசி என்னை நடிக்க வைத்து விட்டார்
அந்தப் பேட்டியில், "சினிமா இன்ஸ்டிடியூட்ல ஒரு டிஸ்கஷன் இருந்தது. அப்போ தான் நான் வெற்றிமாறன பாத்தேன். அந்த சமயத்துல தான் விசாரணை படம் வந்ததுன்னு நினைக்குறேன். அந்த டைம்ல நான் பேசும் விதம் அவரோட மைண்ட்ல செட் ஆகிருக்கும்ன்னு நினைக்குறேன்.
அதுக்கு அப்புறம் வெற்றிமாறன் என்கிட்ட விடுதலை படம் பத்தி பேசி பேசி என்ன அந்த படத்துக்குள்ள கொண்டு வந்துட்டாரு. நாம எல்லாம் சினிமாவுல அரசியல்வாதிங்க பத்தியும் அவங்க செய்யுற ஊழல் பத்தியும் தான் பாத்திருப்போம். ஆனா ஒரு அரசு எப்படி செயல்படுதுன்னு எந்த படத்துலயும் பெருசா சொன்னதே இல்ல.
அதுனால, இந்த தலைமை செயலாளர் கேரக்டர் நாம பண்ணுனா என்னன்னு தோணுச்சு.
பயம் இருந்தாலும் என்ஜாய் பண்ணுனேன்
ஆனா ஷூட்டிங் செட்டுக்கு போகும் போது அங்க இருக்க கூட்டத்துக்கு மத்தியில நடிக்க நிக்கும் போது ரொம்ப டென்ஷனா இருந்தது. இங்க தமிழ் சினிமாவ எடுத்து பாத்தா நிறைய கேரக்டர் ஆர்ட்டிஸ்டா இருக்கவங்க முன்னாடி டைரக்டரா தான் இருந்திருப்பாங்க.
இதுக்கு மேல நான் படத்துல நடிப்பேனான்னு எல்லாம் எனக்கு தெரியாது. இந்தப் படம் என் கேரக்டருக்கு செட் ஆகும்ன்னு நெனச்சேன். அதுனால நடிக்க முயற்சி பண்ணுனேன். ஆனா நான் ஒன்னும் நடிகன் கிடையாது. இருந்தாலும் இந்த விஷயங்கள் எல்லாத்தையும் நான் என்ஜாய் பண்ணுனேன்.
வெற்றிமாறன் டைரக்ஷன் ரொம்ப பிடித்தது
இதுக்கு எல்லாத்துக்கும் நான் வெற்றிமாறனுக்கு தான் நன்றி சொல்லனும். அவர் இந்த செட்டை வழி நடத்திய விதம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஏதாவது ஒரு டயலாக் மிஸ் ஆனா கூட இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகேன்னு தான் சொல்லுவாரு. அதுமட்டுமில்லாம அந்த ஃபீல் கரெக்டா இருந்தா நீங்க அப்படியே போங்கன்னு தான் சொல்லுவாரு.
அப்போ தான் நிறைய விஷயங்கள புரிஞ்சிகிட்டேன். வெற்றிமாறன், படம் எடுத்து முடிச்ச அப்புறம் கூட டயலாக் எல்லாம் மாத்தி மாத்தி அவரே டப் பண்ணி மறுபடியும் எடிட் பண்ணிட்டு இருந்தாரு. அவருக்கு அந்த சீனோட மூட் கரெக்டா இருந்தா போதும்ன்னு நெனக்குறத புரிஞ்சிகிட்டேன்.
சென்சார் போர்டு பிரச்சனை பண்ணல
விடுதலை 2 படத்துக்கு சென்சார் போர்டு பெருசா எல்லாம் எந்த பிரச்சனையும் பண்ணல. குறிப்பிட்ட சில இடத்துல மாஸ்க் பண்ணனும்ன்னு சொன்னாங்க. அவ்ளோ தான். இது எல்லாம் எந்த மாதிரியான படத்துக்கும் நடக்கும்.
விடுதலை 2 படத்தோட கதை எல்லாம் இந்த காலகட்டத்துல சினிமாவா எடுத்து தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுதுன்னா அது ரொம்பவே பாசிட்டிவ்வான முடிவு தான். விடுதலை 2 படத்தை எல்லாம் சென்சார் போர்டு எப்படி விட்டாங்கன்னே எனக்கும் சந்தேகமா தான் இருக்கு. அவங்க படத்துல ரொம்ப தலையிடலன்னு தான் நான் சொல்லுவேன்.
எல்லா படத்துக்கும் பிரச்சனை தான்
அமரன் படம் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. அந்தப் படம் எல்லாரையும் பேலன்ஸ் பண்ணி தான் எடுக்கப்பட்டுச்சு. ஆனாலும் அந்தப் படத்த வச்சு சில பேர் போராட்டம் பண்ணத் தான் செஞ்சாங்க.
இந்த காலத்துல எல்லா படத்த வச்சும் ஏதாவது ஒரு பிரச்சனை வருது. இந்த காலத்துல பம்பாய் மாதிரி ஒரு படத்த எடுக்க முடியாது. மின்சார கனவு மாறி படத்த எடுக்கவே முடியாது. கன்னிகாஸ்திரி எப்படி பாட்டு எல்லாம் பாட முடியும்ன்னு எல்லாம் கேள்வி கேப்பாங்க எனக் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்