தன் கனவு படத்தின் அப்டேட்டை தந்த ராஜமௌலி.. மீண்டும் இணையப் போகும் வெற்றிக் கூட்டணி..
இயக்குநர் ராஜமௌலி தனது கனவுப் படமான மஹாபாரதத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பது உறுதி எனத் ஹிட் 3 பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தன் கனவு படத்தின் அப்டேட்டை தந்த ராஜமௌலி.. மீண்டும் இணையப் போகும் வெற்றிக் கூட்டணி..
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 ஆக்ஷன் த்ரில்லர் படம் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதை பாராட்டியே ஆக வேண்டும்
அப்போது பேசிய ராஜமௌலி, "தாங்கள் எடுக்கும் படத்தின் ரகசியங்கள் வெளியானால் தங்களுக்கு உள்ளுக்குள் கொதிப்பு ஏற்படும். ஆனால், ஹிட் 3 பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர் சைலேஷ் அமைதியாக பதிலளித்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டதாக ராஜமௌலி பாராட்டு தெரிவித்தார்.
