Director Rajakumaran: ‘சேது கிடையாது.. விண்ணுக்கும் மண்ணுக்கும் வரலைனா விக்ரம் இல்லை’ ராஜகுமாரன் ஷாக் பேட்டி!
Vinnukum Mannukum: ‘அது மாதிரி சேது தான் விக்ரமுக்கு கேரியர் அமைத்துக் கொடுத்த படம் என நினைத்திருந்தால் அது தவறு. பெயரை காட்டியது சேதுவாக இருக்கலாம்..’

இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் முன்பு அளித்த பேட்டியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான படம் குறித்தும் அதன் பின் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கும் என்ன காரணம் என்பது குறித்து கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘நீ வருவாய் என படம் மெகா வெற்றி பெற்ற பிறகும், சினிமாவில் பெரிய வாய்ப்பு எதுவுமே வரவில்லை. கிருஷ்ணாரெட்டி என்பவர் மட்டும் பிரசாந்த்-ஷாலினியை வைத்து மலையாள ரீமேக் படம் ஒன்றை இயக்குமாறு அட்வான்ஸோடு வந்தார். நான் அதை பொருட்படுத்தவே இல்லை.
லக்ஷிமி மூவி மேக்கர்ஸ்க்கு தான் பண்ணியிருக்க வேண்டும். இரண்டாவது படமாவது அவர்களுக்கு பண்ணுவேன் என்று எதிர்பார்த்தார்கள். செக் புக்கை தூக்கி போட்டு எவ்வளவு வேண்டுமோ எழுதிக் கொள் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களிடம் எஸ்கேப் ஆக வேண்டும் என்பதற்காக நான் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் அட்வான்ஸ் வாங்கினேன். வேண்டாம் என்றால் திருப்பிக் கொடுக்க அது தான் வசதியாக இருக்கும்.
இரண்டாவது படம் சூப்பர் குட் ப்லிம்ஸ்க்கு பண்ண அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். நானும் அது தான் மரியாதையான முடிவு என காத்திருந்தேன். அதனால் தான் மற்ற தயாரிப்பாளர்களிடம் கமிட் ஆகவில்லை. விண்ணுக்கும் மண்ணுக்கும் பண்ணும் போது எனக்கு பல இடங்களில் இருந்து அட்வான்ஸ் வந்து கொண்டிருந்தது. ஆனால் நான் வாங்கவில்லை.
விண்ணுக்கும் மண்ணுக்கும் பூஜை அன்றே 7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவிட்டது. அதனால் தான் பல தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் உடன் வந்தார்கள். 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகப் போவதில்லை. பெரிய லாபம் என்பதால் வந்தார்கள். விண்ணுக்கும் மண்ணுக்கும் வெளியான பின் பெரிய வசூல் நடக்கவில்லை. அதனால் அதன் பின் வாய்ப்புகள் வரவில்லை.
அதை விட முக்கியமான விசயம், ‘தேவயானியை அடிச்சிட்டு போய்டான்… தேவயானியை கொண்டு போய்டான்’ என்ற மாபெரும் சர்சையும், சங்கடமும் என் மீது விழுந்துவிட்டது. அதனால் பெரிய படங்கள் பெரிதாய் வரவில்லை.
விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் கதை கேட்ட போது ஆர்.பி.செளத்ரி சாருக்கு பிடித்திருந்தது. படமா பார்க்கும் போது இரண்டாம் பாதி அவருக்கு பிடிக்கவில்லை. அது ஒரு டைப் ஆன கதை. யாரும் அதை ஜட்ஜ் பண்ண முடியாது. ஜீவா, ரமேஷிடம் போட்டு காண்பித்த போது, அவர்களுக்கு இரண்டாம் பாதி தான் பிடித்திருந்தது.
வேணும்னா இன்னும் 10 நாள் கூட ஷூட் எடுத்துக்கோய்யா என்று செளத்ரி சொன்னார். முழுமையா எடுத்த படத்தில் மீண்டும் போய் என்ன எடுப்பது என அவரை சமாதானம் செய்துவிட்டேன். பெரியஇடத்துப் பெண், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, சகலகலா வல்லவன் படங்களின் மொத்தம் தான் விண்ணுக்கும் மண்ணுக்கும்.
பார்க்கும் போது அது தெரியல. பார்த்த எல்லாரும் தேவயானியை கல்யாணம் பண்றதையே கதையா எழுதி படம் எடுத்துட்டான் என்று விமர்சனம் செய்தார்கள். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஷூட்டிங்கின் போது எனக்கும் விக்ரம் சாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சரத்குமார் சாருக்கும் எனக்கும், கம்பெனிக்கும் பிரச்னை இருந்தது உண்மை தான்.
விக்ரம் சாரின் ஏதோ ஒரு பேட்டியில், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை வெறுக்கிறேன் என்று கூறியிருந்தார். அதை பார்த்தேன். அது ஏன் என்று தெரியவில்லை. ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும், விஜய் 100 படம் நடித்தாலும், பூவே உனக்காக என்கிற படம் அமைத்த நடைபாதையில் தான் அவர் சென்று கொண்டிருக்கிறார். அதை மறந்துவிடக்கூடாது.
அது மாதிரி சேது தான் விக்ரமுக்கு கேரியர் அமைத்துக் கொடுத்த படம் என நினைத்திருந்தால் அது தவறு. பெயரை காட்டியது சேதுவாக இருக்கலாம். விக்ரமை ஒவ்வொரு குடும்பத்திலும், கிராமத்திலும் கொண்டு போய் சேர்த்தது விண்ணுக்கும் மண்ணுக்கும் தான். சேது படத்தை எந்த பேமிலியும் உட்கார்ந்து பார்க்கப் போவதில்லை.
தேவயானி, குஷ்பு, சரத்குமார் போன்ற ஸ்டார்களை பேக்கிங் பண்ணி விக்ரமை போக்கே மாதிரி ஒவ்வொரு குடும்பத்திலும் கொண்டு போய் சேர்த்து விண்ணுக்கும் மண்ணுக்கும். அது அப்போது ஓடாமல் இருந்திருக்கலாம். இன்றும் கே டிவியில் அது தான் நம்பர் ஒன் மூவி. விக்ரம் சாரை பொறுத்தவரை எப்படி அந்த ஃபீல் வந்தது என தெரியவில்லை.
கையை உடைத்துக் கொண்டு, மொட்டை அடித்துக் கொண்டு நடிப்பது தான் ஹீரோ அல்ல. கலர் கலர் ட்ரஸ் போட்டு ஒரு ரோஜாப்பூவை கொடுத்து அஜித் சார் சுப்பிரமணியாக நிற்கவில்லையா? பயங்கரமா நடித்திருக்கிறீர்கள் என்று ஒருவர் பாராட்டுவதற்காக நடிக்க கூடாது. அப்படி பார்த்தால் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்று நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்,’’
என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் கூறியுள்ளார்.

டாபிக்ஸ்