இந்தக் காதலுக்கு தமிழ் சினிமாவில் மவுசு அதிகம்.. இதைத் தேடித்தேடி ரசிப்பார்கள்.. அன்றே கணித்த டைரக்டர்
96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இயக்குநர் பிரேம் குமார், தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவையும் காதலையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. அதிலும், மிக சாதாரணமாக, எளிய மக்களையும் கடத்தி செல்லும், கலாச்சாரம், நாகரிகம், அழகியல், வலி என அனைத்தையும் ஒரு மெல்லிய கோடாக ஒரு படம் சொல்கிறது என்றால் அதற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்காதா என்ன?
96- 90'ஸ் கிட்களின் காவியம்
அப்படி, காதல், பிரிவு, வலி, ஏக்கம், ஆசை என அனைத்தையும் ஒருசேர அளித்து சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது 96. இந்தப் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பள்ளி கால காதலை மையப்படுத்திய இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாக அமைந்ததுடன் விஜய் சேதுபதிக்கும், திரிஷாவிற்கும் கெரியர் ஹிட் கொடுத்து அவர்களின் மவுசை மேலும் அதிகரித்தது. படம் நெடுகிலும் ராம் - ஜானுவின் காதலை தன்னுடைய காதலாகவே மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். எப்படியாவது இருவரும் அவர்களது காதலை சொல்லிவிட வேண்டும். இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஏதாவது ஒன்று நிச்சயம் நிலைத்து நிற்க வேண்டும் என படம் முழுவதும் நம்பிக்கையோடே காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடங்கிய எதிரப்புக் குரல்
ஆரம்பத்தில் பள்ளிப் பருவ காதல் என்றவுடன் பலரும் அதை விமர்சனம் செய்த நிலையில், படம் கொண்டு செல்லப்பட்ட விதம் மக்களை வெகுவாகக் கவர்ந்து, நாளுக்கு நாள் அந்தப் படத்திற்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பின்னணி இசை பாடல்கள், காட்சிகள் என அனைத்திலும் ரசிகர்கள் ஆராவாரம் செய்த நிலையில், இந்தப் படத்தின் 2ம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வியை ரசிகர்களே தொடர்ந்து கேட்ட வண்ணமே இருந்தனர்.
ஒருதலை ராகம், இதயம் வரிசையில் 96
இந்த சமயத்தில், 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார், பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுடன் 96 படம் குறித்த உரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். அப்போது 96, ஒருதலை ராகம், பூவே உனக்காக, இதயம் போன்ற படங்கள் எல்லாம் மக்களோடு மிகவும் இணக்கமாகிறது. இந்தப் படங்களை அவர்கள் மிகவும் கொண்டாடுகின்றனர். ஒரு காதல் இருக்கிறது. ஆனால் அதை சொல்ல முடிவதில்லை, அப்படியே சொல்லிவிட்டாலும் அது அவர்களின் கைக்கு வந்து சேறுவதில்லை. இப்படி ஒன்று சேராத காதலை மக்கள் ஏன் மிகவும் ரசித்து கொண்டாடுகிறார்கள் என பரத்வாஜ் ரங்கன் கேள்வி எழுப்பி இருப்பார். மேலும், இந்த ஒரே கதை ஏன் எப்போதும் மக்களைக் கவர்கிறது எனக் கேட்டிருப்பார்.
நிறைவேறாத காதல் மேலுள்ள மோகம்
அதற்கு பதிலளித்த பிரேம் குமார், நம் நிஜ வாழ்க்கியில் நிறைய நிறைவேறப்படாத ஆசைகள் இருக்கும். அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் அல்லது அதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், அது எப்போதும் அவர்களை ஒருவித ஆர்வத்துடன் இயங்க வைக்கிறது. நிஜ வாழ்க்கையில் பலருக்கும் அவர்களது காதல் நிறேவேறுவதில்லை. இதனால், இதுபோன்ற படங்கள் அவர்களை எளிதில் கவர்கிறது எனக் கூறியிருப்பார்.
இதை நான் ஒப்புக்கொள்கிறேன். இப்படி மக்கள் அதிகம் விரும்பும் படங்கள் ஏன் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது. இதுபோன்ற படங்கள் மக்களுக்கு விருப்பமானதாக இருந்தாலும் ஏன் அதன் பக்கம் இயக்குநர்கள் செல்வதில்லை என பரத்வாஜ் கேள்வி எழுப்பினார்.
10 வருஷத்துக்கு ஒரு படம்
இதற்கு பதிலளித்த பிரேம், 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் மக்கள் விரும்பும் காதல் படங்கள் எடுக்கப்படுகின்றன என சில தகவல்கள் வெளியாகிறது. தற்போது தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயாவிற்குப் பிறகு 96 திரைப்படம் வெளயானது. எனக்கும் பலமுறை யோசித்தாலும் அதுபோன்ற படங்கள் பெரிதாக நியாபகம் இல்லை.
அந்தச் சாயலில் பார்த்தால், திருச்சிற்றம்பலம் படம் ஒரு விதத்தில் மக்கள் விரும்பிய மிக எளிதான காதல் படமாக இருந்திருக்கலாம் எனக் கூறியிருப்பார். இதற்கு பரத்வாஜ் ரங்கனும் ஆதரிப்பார். இவர்கள் இருவரும் இந்த பேட்டியில் மக்களுக்கு நிறைவேறாத காதலைப் பற்றி உள்ள சிந்தனைகளையும் ஏக்கங்களையும் மிக அழகான புரிதலோடு எடுத்து வைத்திருப்பார்.
இவர்கள் இருவரும் பேசிய இந்த வீடியோ பலருக்கும் தங்களது பழைய காதலையும், அது சுமந்து நிற்கும் நினைவுகளையும் நியாபகப் படுத்துவது போன்று இருந்தது. இதையடுத்து பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
96 படத்தின் 2ம் பாகம்
இந்நிலையில், சமீபத்தில் வேறொரு பேட்டியில் பேசிய இயக்குநர் பிரேம் குமார் தன்னிடம் 96 படத்தின் 2ம் பாகத்திற்கான கதை முழுவதுமாக தயாராகி விட்டது. நடிகர்களின் கால் ஷீட்டிற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பார், இது காதலை மையப்படுத்தாமல், குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது எனவும் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருப்பார்.
டாபிக்ஸ்