சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த உமா ரமணன்! பிடிவாதம் பிடித்த பேரரசு! அடுத்தடுத்து பாடிய 2 பாடல்கள்!
இந்த இரண்டு பாடல்களும் உமா ரமணனின் கேரியரில் மிகவும் வித்தியாசமான டிரெண்டிங் பாடல்களாகும். இதனையடுத்து இந்த ஆண்டு உமா ரமணன் நம்மை விட்டு பிரிந்தாலும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

2024 ஆவது ஆண்டு தமிழ் சினிமாவின் தரமான ஆண்டு எனக் கூறலாம். உலகத் தரத்திலான படங்கள், அற்புதமான அறிமுக இயக்குநர்கள் என பல சிறப்பான நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் ஒரு சில படங்களின் சறுக்கல்கள், எதிர்பார்த்த படங்களின் தோல்வி என சில ஏமாற்றங்கள் அளித்தாலும் போன ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்தது எனக் கூறலாம். இந்த நிலையில் பல சினிமா பிரபலங்களும் நம்மை விட்டு மறந்தனர். வயது மூப்பு காரணமாக அவர்கள் மறைந்த போதிலும் அவர்களின் இடத்தை நிரப்ப முடியாத அளவிற்கு தான் அவர்களது இழப்பு இருந்தது எனக் கூறலாம். அந்த வரிசையில் நம்மை விட்டு மறைந்த பின்னணி பாடகி உமா ரமணன் என்றைக்கும் அவரது பாடலால் நினைவு கூறப்படுகிறார்.
பாடகர் உமா ரமணன்
1977 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ கிருஷ்ண லீலா படத்தில் பாடகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல பாடல்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் இரண்டாவதாக நிழல்கள் படத்தில் பாடிய “பூங்கதவே தாழ்திறவாய்” பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். மேலும் இவரது மெல்லிசைக் குரல் பாடல்களின் தொகுப்பு இன்று வரை நமது ப்ளே லிஸ்ட்டில் இருந்து வருகிறது. இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பிரம்மிக்கவே வைத்தது.
இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ. வி. ரமணனைச் சந்தித்தார். அப்போது ரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.
