Perarasu: மாத்தி எழுதிய நிருபர்; உண்மை முகத்தை காட்டி கோபமடைந்த விஜய் - அரண்டுபோன பேரரசு - சிவகாசி செய்த சம்பவம்!
நான் அவரிடம் கோபத்தை பெரிதாக பார்த்ததில்லை. காரணம் நான் அவர் சொன்னது போல நடந்து கொள்வேன். அவருடைய உதவியாளரிடம் அவர் சில சமயங்களில் கோபப்படுவார் அப்போது விஜய் சாருக்கு இப்படி கோபம் வருமா என்று நினைத்துக் கொள்வே
நடிகர் விஜயுடன் ‘திருப்பாச்சி’ ‘சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியவர் இயக்குநர் பேரரசு. இவர் பேட்டி ஒன்றில் விஜய் உச்சக்கட்ட கோபம் அடைந்த தருணத்தைப் பற்றி பேசி இருக்கிறார்.
“விஜய் சாருக்கு கோபம் எப்போதாவது வரும். ஆனால் அதை அவர் வெளிக்காட்டும் விதம் ஒன்று இருக்கிறது. சடார் என்று வார்த்தைகளை விட்டு விட மாட்டார். முகம் சின்னதாக மாறிவிடும். சொன்னது போல நடக்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.
நான் அவரிடம் கோபத்தை பெரிதாக பார்த்ததில்லை. காரணம் நான் அவர் சொன்னது போல நடந்து கொள்வேன். அவருடைய உதவியாளரிடம் அவர் சில சமயங்களில் கோபப்படுவார் அப்போது விஜய் சாருக்கு இப்படி கோபம் வருமா என்று நினைத்துக் கொள்வேன்.
சிவகாசி படபிடிப்புன்போது வெளியிடத்தில் படபிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது நிருபர் ஒருவர் விஜய் சாரிடம் பேட்டி எடுக்க வந்திருந்தார். வந்த அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போஸ்டர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு அடுத்த நாள் தனது பத்திரிக்கையில் இதுதான் கதையாக இருக்குமோ என்று ரீதியில் எழுதி விட்டார். அந்த சமயத்தில் அவர் ஒரு போன் பேசினார்.
விஜய் சாரின் கோபத்தை நான் முதல் முறையாக அன்றுதான் பார்த்தேன். உச்சகட்ட கோபத்தை பார்த்தேன் என்று கூட சொல்லலாம். அந்த சமயத்தில் அவருக்கான காட்சி இருந்தது ஆனால் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு நான் காட்சிகளை மாற்றி விட்டேன் வேறு ஆட்களை வைத்து எடுத்துக் கொண்டிருந்தேன்” என்று பேசினார்.