இதெல்லாம் நடக்கவே கூடாது.. சினிமாவ காப்பாத்தணும்.. ஆதங்கத்தில் குமுறும் இயக்குநர் பேரரசு..
தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனைகள் நடந்திருக்கவே கூடாது. தமிழ் சினிமாவே காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் தான் உள்ளது என இயக்குநர் பேரரசு ஆதங்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் கதிரேசனுக்கும் ஆர்.கே. செல்வமணிக்கும் இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனால் ஏராளமான சினிமா தொழிலாளர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்.
சினிமாவ காப்பாத்தணும்
"முதல்ல இந்த நிகழ்வே நடக்கக் கூடாது. இது எல்லாம் நடக்கக் கூடிய சூழ்நிலையில சினிமா இல்ல. சினிமாவையே காப்பாத்த வேண்டிய சூழ்நிலையில தான் எல்லோரும் இருக்கோம்.
இப்போ நான் என்ன காப்பாத்திக்குறது, பெப்சிய காப்பாத்திக்குறது, சங்கத்த காப்பாத்திக்குறதுன்னு இகருக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்து சினிமாவ காப்பாத்தாணும். ஏன்னா இன்னைக்கு சினிமா அதுவே மூழ்கி போய் தான் இருக்கு. மூழ்குற கப்பல்ல போய் நாம பாரத்த ஏத்தி வைக்குறோம். அதுவந்து எனக்கு வருத்தமா இருக்கு. இது சண்டப் போடடுக்குற நேரம் இல்ல.
இது ஆராய்ச்சிக்கான நேரம்
இன்னைக்கு எல்லாம் சின்ன படம் எடுக்குறவங்க அவ்ளோ கஷ்ட படுறாங்க. ஒரு 4 கோடியில படம் எடுத்தா யூஸ் பண்ண முடியல. 4 கோடி , 5 கோடி போட்டு படம் எடுத்தாலும் தியேட்டர்ல ரிலீஸ் பண்ண கஷ்டப்படுறாங்க. க்யூபுக்கு பணம் கட்டுறாங்க, தியேட்டருக்கு பணம் கட்டுறாங்க. எதுவும் வெளிய வரமாட்டிங்குது. மக்கள் வந்தா தான படம் ஓடும். சிறிய படங்களுக்கு மக்கள் வரலன்னா என்ன காரணமுன்னு நாம தான் ஆராய்ந்து பாக்கணும். அதுக்கான நேரம் தான் இது.
சினிமாவுக்கே ஆபத்து
சினிமாவுல இருக்கவங்க எல்லாம் இத பத்தி பேசி, மக்கள எப்படி தியேட்டருக்கு கொண்டு வரணும்ன்னு யோசிக்க வேண்டிய இடத்துல இருக்கோம். இது சினிமாவுல இருக்கவங்க மட்டும் இல்ல, அரசாங்கத்தோடவும் சேர்ந்து பேச வேண்டிய விஷயம். ஏன்னா சினிமா தியேட்டர், சினிமா உலகத்துக்கு அவங்க முதல்வர் தான். ஒரு பக்கம் டேக்ஸ், ஒருபக்கம் நடிகர் சங்கம், ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம்ன்னு இருக்கு. இது வியர்டான விஷயம் இல்ல. தமிழழ் சினிமாவுகக்கே ஆபத்தான விஷயம்.
முடிவுக்கு வந்துட்டோம்
பெப்சி ஒரு கோரிக்கை வைக்குது. புரொடியூசர் கவுன்சில் ஒரு கோரிக்கை வைக்குது. நாங்க நீண்ட காலமாக பேசி பேசி ஒரு தீர்வுக்கு வந்துட்டோம். பெப்சி, புரொடியூசர் கவுன்சில், டைரக்டர் அசோசியேஷன் எல்லாம் சேர்ந்து ஒரு 4 மீட்டிங் மேல நடத்தினோம். இதுல புரொடியூசர் பாதிக்கப்பட கூடாது. தொழிலாளர்களும் பாதிக்கப்படக் கூடாது. அவங்களுக்கு உழைப்புக்கு ஏத்த ஊதியம் தரணும். அப்போ, தொழிலாளர்கள் கொஞ்சம் புரொடியூசர் பக்கம் நின்னு அவங்களுக்கு உதவமும்.
திட்டமிடல் வேணும்
அதேசயமம், சொன்ன பட்ஜெட்ல படத்த முடிச்சு தரணும். இது எங்க கையில இல்ல. இருந்தாலும் ஒத்துக்குறோம். புரொடியூசர காப்பாத்துறோம். 2 கோடின்னு சொல்லி 4 கோடிக்கு எடுத்தா அவரு காணாம போயிடுவாரு. 2 கோடிக்கே போட்ட காச எடுக்க முடியல. 4 கோடிக்கு எடுத்தா என்ன ஆகுறது. அதுக்கு யார் பொறுப்பேத்துக்குறது. அதுனால சரியா திட்டமிடல் வேணும். இத எல்லாம் மீட்டிங்லயே பேசினோம். இது எல்லாம் எங்களுக்காக இல்ல புரொடியூசருக்காக தான். முன்ன எல்லாம் எல்லாருக்கும் ஒரே பேட்டா எல்லாம் இருந்தது. இப்போ இதை எல்லாம் தவிர்த்திட்டோம்" என்றார்.
