“உங்கள எல்லாம் நாங்க ஏத்துக்கனும்.. ஆனா.. இது ஒன்னும் அவ்ளோ கேவலம் இல்ல..” -கொந்தளித்த பேரரசு
சினிமாக்காரர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் வரும் விமர்சனங்களுக்கு எதிராக இயக்குநர் பேரரசு மிகவும் கோவமாக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ரக்ஷிதா. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் எக்ஸ்ட்ரீம். இந்த எக்ஸ்ட்ரீம் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது, இதில் இயக்குனரும் இயக்குநர் சங்கத்தின் செயலாளருமான பேரரசு பங்கேற்று, படம் குறித்தும், இன்றைய அரசியல் சூழல் குறித்தும் பேசியுள்ளார்.
கலாச்சாரம் மாறிவிட்டது
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த மேடையில் நிறைய நல்ல விஷயங்களை பார்க்க முடிந்தது. படத்தின் இயக்குநர் அவரது பெற்றோரை மேடைக்கு அழைத்து ஆசிர்வாதம் வாங்கினார். இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். இப்போ கலாச்சாரம் எல்லாம் மோசமாகிவிட்டது.
எல்லா நல்லதையும் சினிமா தான் சொல்லுது
ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பா இருக்குறது எப்படின்னு இந்தப் படம் சொல்லுது. இதப்பத்தி அரசியல்வாதியோ ஆன்மீகவாதியோ பேசுறது இல்ல. சினிமாக்காரன் தான் பேசுறான்.
குடியால் வரும் விளைவு, கூட்டுக் குடும்பம், சாதிப் பிரச்சனை என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பது சினிமா தான். ஆனால், சினிமாக்காரன் இவர்களுக்கு எல்லாம் கூத்தாடியாகத் தான் தெரிகிறார்கள்.
உங்க கண்ணுக்கு கூத்தாடி
நீங்க என்ன பண்றீங்க? அவன குறை சொல்றது. அவன் இவன சொல்றது. நீ ஊழல் பண்ணலையா... நீயும் ஊழல் பண்ணலையான்னு சொல்றது. இன்றைக்கு யாராவது ஒரு அரசியல்வாதி மேடையில் நல்ல விஷயத்தை பேசுறாங்களா? நல்ல விஷயமே இங்க சினிமாதான். சினிமாவை விட உயர்ந்தது இந்த உலகத்தில் எதுவும் இல்ல.
உங்களால ஏன் ஏத்துக்க முடியல
ஒரு சில அரசியல்வாதி குடும்பத்தில் இருந்து இங்க வந்து நடிப்பாங்க.... யாராவது சினிமாக்காராங்க அரசியல்வாதிங்க எல்லாம் ஏன் நடிக்க வர்றாங்கன்னு கேட்கவே மாட்டாங்க. ஆனா சினிமாவில் இருந்து ஒருத்தர் அரசியலுக்கு போய்ட்டா கூத்தாடி ஏன் வரான்னு கேக்குறாங்க. அரசியல்வாதிங்க நடிக்க வந்தா நாங்க ஏத்துப்போம்.. ஆனா சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்தா நீங்க ஏத்துக்கமாட்டிங்க.
காலம் காலமா கேக்குறோம்
கூத்தாடிங்கற வார்த்தை இப்போ இல்ல காலம் காலமா கேட்டுக்கிட்டு தான் இருக்கோம். ஆனா ஆண்டுக்கிட்டு தான் இருப்போம். கலைஞர் முதலில் கூத்தாடி. நாடகத்துல பெண் வேடம் பேட்டாரு. எம்.ஜி.ஆரும். கூத்தாடி. அடுத்தது ஜெயலலிதா வந்தாங்க அவங்களும் கூத்தாடி. விஜயகாந்தும் கூத்தாடி தான். இன்னிக்கு விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு. இன்னைக்கு அவரையும் நீங்க கூத்தாடின்னு சொல்றீங்க.
இது மிகப்பரிய தப்பு
கூத்தாடிங்கறது நாங்க பெருமையாதான் நினைப்போம். அத இழிவா சொல்லாதீங்க. கூத்தாடிங்கறது பெருமையான வார்த்தை. அது ஒரு தொழில். எப்படி ஒரு சாதியை குறிப்பிட்டு இழிவா பேசுறது எவ்வளவு பெரிய தப்போ அதை மாதிரி கூத்தாடிங்கற தொழில இழிவா யாராவது பேசினா மிகப்பெரிய தப்பு. எந்த நல்ல விஷயத்தயும் சினிமாவுல நாங்க சொல்றோம். எல்லா வகையிலும் சினிமாக்காரன் சிறந்தவன். அதுனால எங்கள அசிங்கப்படுத்தாதீங்க என காட்டமாக பேசினார்.
முன்னதாக நடிகர் விஜய் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக எழுந்த கருத்துகளுக்கு பேரரசு தனது கண்டனங்களை இப்படி வெளிப்படுத்தி உள்ளார்.
ஸோ
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.