பொறாமை.. இயலாமை.. நடிகர்களிடம் இதெல்லாம் பிடிக்காது லிஸ்ட் கொடுத்த இயக்குநர் பார்த்திபன்.. லிஸ்ட் பெருசா போகுதே..
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், கோலிவுட்டை கலக்கி வரும் சில நடிகர்களிடம் தனக்கு பிடிக்காதவை என்னென்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் பல முத்திரைகளை பதித்து மக்கள் மனங்களை வென்றவர் பார்திபன். இவர், தனது அசாத்திய பேச்சாலும், கிண்டலான முக பாவனைகளாலும், தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்து வந்தார். பின்னர், அவர், சினிமாவில் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும் என எண்ணி, ஒத்த செருப்பு, இரவின் நிழல், டீன்ஸ் போன்ற படங்களை இயக்கினார். இது மக்கள் மத்தியில் கலவையான கருத்துகளை பெற்றதுடன், விருதுகளையும் குவித்தது.
இந்நிலையில், டீன்ஸ் படம் குறித்து சில நாட்களுக்கு முன் புதிய தலைமுறை செய்தியாளரிடம் கலந்துரையாடிய பார்த்திபன் தன் மனதில் உள்ள சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா நடிகர்களின் பெயரை செய்தியாளர் வரிசையாக சொல்ல, அவரிடம் தனக்கு பிடிக்காதவை என்னென்ன என்பதை அழுத்தமாகவும், அவருக்கே உரித்தான பாணியிலும் நச்சென்று கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவை பொறாமையால் கூட எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். சுதா கொங்கரா படத்தில் 20 வயது பையனாக வரவேண்டும் என்றால் வருகிறார். கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் டவுசர் போட்டுவிட்டு அதைவிட சின்னப் பையனாக வரசொன்னால் வருகிறார். என்னால் அது முடியவில்லை. அதனால் எனக்கு சூர்யாவை பிடிக்கவில்லை
நடிகர் கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசன் ஏகப்பட்டவர்களை காதலித்தவர். ஆவர் இப்போ எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது எனக்கு பிடிக்க வில்லை.
நடிகர் ரஜினிகாந்த்
எனக்கு நடனமாடவே தெரியாது. ஆனால். ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியான படங்கலில் கூட நடனமாடி வருகிறார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
நடிகர் விஜய்
200 கோடியை நான் முழுவதுமாக பார்த்தது கூட இல்லை. ஆனால், விஜய் அதனை தூக்கிப் போட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார். அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு ரொம்ப நாட்களாக அரசியலில் பயணிக்க ஆசை உள்ளது. ஆனால், எனக்கு இப்போது வரை தன்னிறைவு வரவில்லை. நான் இன்னும் சினிமாவிலேயே சாதிக்காத போது, அரசியலில் சாதிப்பேனா என்ற நம்பிக்கை இன்னும் எழவில்லை.
என்னிடம் நிறைய பேர் கேட்டதுண்டு, வீடு, வாசல் என அனைத்தையும் விட்டுவிட்டு எப்படி சினிமா மட்டும் போதும் என இருக்கிறீர்கள் என பல கேள்வி என்னிடம் எழுவதுண்டு.
ஆனால், நடிகர் விஜய் சினிமாவின் உச்சம். அவர் நடித்த கில்லி படம் ரீ ரிலீஸில் கூட பல கோடி வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த பணத்தை பார்த்தாவது விஜய் மனசு சஜ்ஜலப்படும் என நினைத்தேன். இப்போது கூட ஒரு டைரக்டர் உங்களுக்காக கதை வைத்துள்ளேன். என் படத்தில் நடிக்க வருமாறு விஜய்யிடம் கேட்டு, அவர் மீண்டும் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவர் செல்லும் விஷயம் நல்ல நோக்கத்திற்காக என்பதால் அது பிடிக்காது.
இளையராஜா
இசைஞானி இளையராஜாவிடம் எதாவது பிடிக்கவில்லை என யாராவது சொன்னால் அவனை எனக்கு பிடிக்காது.
பார்த்திபன்
நான் எதிர்பார்க்கும் பதிலைத் தவிர அனைத்தையும் எனக்கு தருவதால் அவனை எனக்கு தெரியாது.
மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம் இன்னும் ஒரு இரண்டு வார்த்தை என்னிடம் அதிகமாக பேசி இருக்கலாம். அவர் அப்படி செய்யாததால் எனக்கு பிடிக்காது.
நடிகர் விக்ரம்
அவர் பிற்காலத்தில் இவ்வளவு பெரிய நடிகராக வலம் வருவார். எப்போதும் அதே இளமையுடன் இருப்பார் என என்னிடம் சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் அவருக்கு முன்பே சீயான் விக்ரம் நடிக்கும் என பேனர் எல்லாம் வைத்து ஹவுஸ் புல் படத்தில் அவரோடு சேர்ந்து நானும் பிரபலமாகி இருப்பேன்.
நடிகர் விஜய் சேதுபதி
ஈரம் படாமல் அவர் ஆண்களுக்கு கொடுக்கும் முத்தம் அது எனக்கு பிடிக்காது. ஒரு பெண்ணுக்காக 4 நான்களுக்கு அவர் கொடுக்கும் முத்தம் எனக்கு பிடிக்காது.
நடிகர் சிலம்பரசன்
அவர் மிகவும் தத்துவவாதியாக மாறிவிட்டார். உடல்நலம் எவ்வளவு முக்கியம் என அவர் பேசப்பேச உறுத்துகிறது. இது எனக்கு கில்ட் ஆகிறது. அது பிடிக்கவில்லை. அவரின் உடல்நலமும் ஸ்டைலும் பிடித்திருக்கு. அவர் முன்பு கிண்டலுக்கு உரியவராக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தார். ஆனால், இப்போது அதையெல்லாம் மாற்றி ஒரு பெரிய இடத்தில் போய் அமர்வது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. அவர் உயர்ந்த இடத்தில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான்
பலவீனமே இல்லாத மனிதனாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
டீன்ஸ்
மக்கள் டீன்ஸ் படத்தை எனக்காக பார்க்கவேண்டும். மக்களுக்கு என்ன தலையெழுத்தா இந்த படத்தை எல்லாம் பார்க்க வேண்டும் என. ஆனால், அவர்கள் எனக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றார்.
13 குழந்தைகளின் வாழ்வில் நடக்கும் விஷயத்தை மையப்படுத்தி இவர் எடுத்துள்ள டீன்ஸ் படம் குறித்த பேட்டியில் அவர் இவ்வாறு பேசியது சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டாபிக்ஸ்