Pa. Ranjith: யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்று! பா. ரஞ்சித் காட்டம்
Director Pa. Ranjith: யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்

கடந்த 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிக மக்களை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் சினிமா இயக்குநர் பா. ரஞ்சித், சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரகை தொடர்பாக தனது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளார்.