‘அவதாரை குறை சொல்லும் போது நான் எம்மாத்திரம்?.. சின்னத்தம்பி கூட இப்போ ஃப்ளாப் ஆகிடும்’ பி.வாசு உருக்கம்!
P.Vasu: ‘இரு தோல்விகள் தொடர்ந்தால், நம்மை யார் என்றே தெரியாத மாதிரி போவார்கள். அதெல்லாம் பெரிய அவமானமாக கருதுகிறேன்’

இயக்குனர் பி.வாசு பேட்டி
சந்திரமுகி 2 படத்திற்கு பின், யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் பி.வாசு அளித்த உருக்கமான பேட்டி இதோ:
‘‘ஒரு படம் ஆரம்பிக்கும் போது, அதை நான் முடிவு பண்ணிவிட்டேன் என்றால், அது சரியோ, தவறோ, நான் எடுத்துப்பேன். ஆனால், எனக்கு தைரியமா இந்த துறையில் ஊக்கம் அளிப்பது என் பள்ளி நண்பர்கள் தான்.
என்னுடைய படத்தை பார்த்துவிட்டு, ‘டேய்.. என்னடா படம் எடுத்துருக்க?’ என்பதும் அவர்கள் தான். அதே சில படங்களைப் பார்த்து விட்டு, ‘ரொம்ப பெறுமையா இருக்குடா’ என்று சொல்வதும் என் நண்பர்கள் தான். இன்று என்னுடைய பலம் எல்லாம், என்னுடைய நண்பர்கள் தான்.