Actor To Politician: ‘4 படம் ஹிட் ஆச்சுன்னா முதலமைச்சர் தான்..’ நடிகர்களைத் தாக்கும் டைரக்டர்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor To Politician: ‘4 படம் ஹிட் ஆச்சுன்னா முதலமைச்சர் தான்..’ நடிகர்களைத் தாக்கும் டைரக்டர்..

Actor To Politician: ‘4 படம் ஹிட் ஆச்சுன்னா முதலமைச்சர் தான்..’ நடிகர்களைத் தாக்கும் டைரக்டர்..

Malavica Natarajan HT Tamil
Jan 13, 2025 06:20 PM IST

Actor To Politician: சினிமாவுல இருக்கவங்க எல்லாம் 4 படம் தொடர்ந்து ஹிட் ஆகிடுச்சின்னா அவங்கள முதலமைச்சரா கற்பனை பண்ண ஆரம்பிச்சிடுறாங்க என இயக்குநர் நந்தகுமார் விமர்சித்துள்ளார்.

Actor To Politician: ‘4 படம் ஹிட் ஆச்சுன்னா முதலமைச்சர் தான்..’ நடிகர்களைத் தாக்கும் டைரக்டர்..
Actor To Politician: ‘4 படம் ஹிட் ஆச்சுன்னா முதலமைச்சர் தான்..’ நடிகர்களைத் தாக்கும் டைரக்டர்..

முதலமைச்சர் ஆசை

அந்தப் பேட்டியில், "4 படம் ஹிட் ஆகிடுச்சின்னா அவங்கள முதலமைச்சரா கற்பனை பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. போலீஸ்காரங்க எல்லாம் சல்யூட் அடிக்கனும்ன்னு ஆசப்படுறாங்க

எம்ஜிஆர் காலத்துல இருந்தே அதுதான் நிலைமை. நான் சொல்றத நீங்க எல்லாம் கேக்குறதுக்கு என்ன தேவையோ அதை எல்லாம் நான் செய்வேன்னு செய்ய ஆரம்பிச்சிடுறாங்க.

பில்டப் கொடுக்குறாங்க

அதுக்காக முதல்ல அவங்க ஜிம் பாய்ஸ் வச்சிப்பாங்க. அவங்கள நெருங்கவே முடியாத மாதிரி பில்டப் செய்வாங்க. அதுக்கு அப்புறம் பி.ஆர். வச்சிப்பாங்க. அதுக்கு அடுத்தபடியா மேனேஜர் வச்சிருப்பாங்க. அவங்களுக்கு கீழ அசிஸ்டன்ட் மேனேஜர்ஸ் இருப்பாங்க.

அதாவாது ஒரு மனுஷன சுத்தி 25 அல்லக்கைங்க இருப்பாங்க. அந்த அல்லக்கைங்கள மீறி அந்த ஹீரோவ பாக்கவே முடியாது. ஒரு முதலமைச்சர கூட போய் பாத்து மனு குடுக்க முடியும். ஆனா ஒரு ஹீரோவ நெருங்க முடியாது. இது எனக்கும் இருக்க ஆதங்கம்.

பிச்சக் காசுல ஆடம்பரம்

நடிகர்கள் தான் இப்படின்னு பாத்தா நடிகைகளும் இதே மாதிரி தான். ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிட்டா இந்த உலகத்துலயே நான் தான் பெரிய அழகின்னு நெனக்க ஆரம்பிச்சிடுறாங்க. எல்லாரும் அவங்கள சுத்தி வரணும். ஆட்டோகிராப் வாங்கனும்ன்னு ஆசப்படுறாங்க. அந்த எண்ணம் வந்தா எல்லாமே முடிஞ்சுபோச்சு.

ஒவ்வொரு ரசிகனும் டிக்கெட் போட்டு வாங்குற அந்த பிச்சக் காசுலதான் நாம ஆம்பரமா வாழுறோம்ங்குற எண்ணமே இரு்ககாது. இவங்க பிறக்கும்போதே பெரிய பணக்காரங்களா இருக்க மாதிரி நினைச்சிட்டு இருக்காங்க.

அனுதாபம் தேடுறாங்க

இங்க ஜெயிச்சவங்கள விட ஜெயிச்சதா நெனச்சிட்டு இருக்கவங்க ஆசை தான் தாங்க முடியல. அவங்கள எல்லாம் ஒன்னுமே பண்ண முடியல.

பெரிய பெரிய ஆளா சினிமாவுல முன்னேறி போகும் போது அப்படியே சறுக்கி கீழ விழுறாங்க. அந்த சமயத்துல எல்லாரும் அனுதாபாம் தேட ஆரம்பிச்சிடுறாங்க. அப்போ அனுதாபம் தேடி என்ன பயன். டாப்ல இருக்கும் போது எல்லா ரசிகர்களையும் மீட் பண்ணி அவங்ககிட்ட பேசிருக்கனும்ன்னு ஏன் யோசிக்க மாட்டீங்கிறாங்க.

போட்டி அதிகம்

இங்க அரசியல்ல உதயநிதி முதலவமைச்சரா வர்ற வரைக்கும் தான் அமைதியா இருப்பாங்க. அவரு முதலமைச்சரா வந்துட்டா எவ்வோ பேர் அவருக்கு போட்டியா வருவாங்கன்னு தெரியுமா?

இங்க முதலமைச்சரா ஆகணும்ன்னு வந்த பலர் காணாம போயிட்டாரு. சினிமாவுல பேச்சா பேசுனவங்க எல்லாம் இப்போ பேச முடியாமலே போயிட்டாங்க.

இது எல்லாமே அவங்க செஞ்சதுக்கு தான் அனுபவிக்குறாங்க. இவங்க உச்சத்துல இருக்கும்போது போட்ட ஆட்டம் தான் இ்பபோ வந்து வினாயா நிக்குது. இத யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க. இவங்க எல்லாம் கீழ விழுந்ததுக்கு அப்புறம் அனுதாபம் தேடுறாங்க" எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.