Nayanthara: 'நயன்தாரா ஜாதகத்துல முதலமைச்சர் யோகம் இருக்கு.. குடும்பத்த பிரிஞ்சு வந்தா நிச்சயம் இது நடக்கும்' -நந்தகுமார்
Nayanthara: நயன்தாராவின் ஜாதகத்துல அவங்க முதலமைச்சர் ஆக எல்லா வாய்ப்புகளும் இருக்குன்னு ஜோதிடர்கள் கணித்ததாக கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Nayanthara: 'நயன்தாரா ஜாதகத்துல முதலமைச்சர் யோகம் இருக்கு.. குடும்பத்த பிரிஞ்சு வந்தா நிச்சயம் இது நடக்கும்' -நந்தகுமார்
Nayanthara: நயன்தாரா திருமண பந்தத்தில் இணைந்த நாள் முதலே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். திருமண புகைப்படங்களை வெளியிட்டது, குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றது, சினிமா சம்பந்தமான பிரச்சனை, தனுஷுடன் பிரச்சனை, விக்னேஷ் சிவன் செல்லும் இடமெல்லாம் பிரச்சனை என எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் சூழ உள்ளார்.
இந்நிலையில், இவரது திருமண வாழ்க்கை எப்படி உள்ளது, நயன்தாராவின் வாழ்வில் இனி என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து கிங்உட்ஸ் டிவி எனும் யூடியூப் சேனலில் பேசியுள்ளார் கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார்.
விக்னேஷ் சிவனுக்கு லவ் ஃபெயிலியர்
இந்தப் பேட்டியில், "நயன்தாரா பொய் சொல்லி விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணனும்ங்குற எந்த அவசியமும் கிடையாது. விக்னேஷ் சிவன் ஏற்கவே ஒரு பொன்னை லவ் பண்ணிருக்காரு. அதை அவரே என்கிட்ட சொல்லிருக்காரு.