Mysskin Speech: 'கெஞ்சிக் கேட்கிறேன்... ஒரு நடிகை பத்தி அப்படி பேசாதீங்க' - மிஷ்கின் உருக்கம்!
பெண்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள் என நடிகை த்ரிஷா மீதான அவதூறு கருத்துகள் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.

மீரா மஹதி இயக்கத்தில் ஃபேண்டஸி காமெடி படமாக உருவாகியுள்ளது 'டபுள் டக்கர்' திரைப்படம். தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், "தீரஜ் அழைத்ததால் தவிர்க்க முடியாமல் இங்கு வந்துள்ளேன். ஏனேன்றால் தீரன் இதுவரை 500 பேர் உயிரையாவது காப்பாற்றி இருப்பார். அவர் ஒரு மிகப்பெரிய இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்.
மருத்துவராக இருந்தாலும் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர். ஒரு மருத்துவராக அவருக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டார். ஆனால், அதையும் மீறி அவர் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டராக விரும்புகிறார். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான்.
உதவி இயக்குனர்கள் அல்லது சினிமாவிற்கு இயக்குனராக வருபவர்கள் எதாவது ஒரு படத்தில் வேலை பாருங்கள். ஒரு நடிகையைப் பற்றி அவ்வளவு எளிதாக பேசிவிடாதீர்கள். நான் இரண்டு முறை தான் த்ரிஷாவை நேரில் பார்த்துள்ளேன். எளிமையான பெண். மென்மையாக பேசுபவர். அவர் குறித்து அவதூறாக யார் பேசினார், எப்படி பேசினார் என்பது குறித்த விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. நம் வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி தவறாக பேசுவோமா? நம் தாயைப் பற்றி தவறாக பேசுவோமா? தயவு செய்து பெண்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள்.
வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய கஷ்டப்பட்டுக் கொண்டு எல்லோரும் அதனை நாகரீகமாக கடந்து செல்ல வேண்டும். ஒரு பெண்ணை அழவைப்பவன் ஆண்மகனே இல்லை. நடிகையாக இருப்பவர் எவ்வளவு சிரமப்படுவார் என்பது எனக்குத் தெரியும். வாழ்க்கையில் மிக உன்னதமான நிலையை அடைய வேண்டும் என கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். உங்கள் மகள், தங்கையைப் போல நினைக்க வேண்டும். குறிப்பாக நடிகைகளைப் பற்றி பேசாதீர்கள். ஒரு பெண்ணை அழ விடாதீர்கள். கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்