Director Mysskin: ‘ பூர்ணா வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும்’ - மிஷ்கினின் விநோத ஆசை!
நடிக்கும் போது தன்னுடைய சுயத்தை இழப்பவர்கள்தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பது என்னுடைய கருத்து. பூர்ணா அந்த மாதிரியான நடிகைதான்
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென்று தனி முத்திரையை பதித்தார்.
இடையில் நடிகர் அவதாரமும் எடுத்த மிஷ்கின், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், பேச்சுலர், மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இவரது தம்பி ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் திரைப்படம் டெவில்.
இந்தப்படத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அண்மையில் நடந்து முடிந்தது. அப்போது பேசிய மிஷ்கின், “ நடிக்கும் போது தன்னுடைய சுயத்தை இழப்பவர்கள்தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பது என்னுடைய கருத்து. பூர்ணா அந்த மாதிரியான நடிகைதான்.
பூர்ணா என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். என்னை அவள் தாய் போல பார்த்துக்கொள்வாள். என்னுடைய குழந்தையை விட அவளது குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன். சாகும் வரை அவள் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் பூர்ணா இருப்பாள்” என்று பேசினார்
டாபிக்ஸ்