பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர்.. என் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றேன் - இயக்குனர் மிஷ்கின்!
பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் நான் கீழே விழுந்தபோது பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர் பாலா என தெரிவித்துள்ளார்.

பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். நான் கீழே விழுந்தபோது பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர் பாலா என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும்; பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, மாரி செல்வராஜ், ஜிவி பிரகாஷ், மிஷ்கின், அருண் விஜய் என ஏகப்பட்டோர் கலந்துகொண்டார்கள். இதில் மிஷ்கின் உருக்கமாக பேசினார்.
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “நான் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பெரிதாக போகவில்லை ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு என்னை அழைத்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தோம். அப்போது பாலா என்னை பார்த்து எனக்கு படம் பண்றியா டா என்று கேட்டார். அப்படி பண்ணிய படம்தான் பிசாசு. நான் கீழே விழுந்திருந்த நேரத்தில் என் கையைப் பிடித்து ஒரு படத்தை கொடுத்தார் பாலா.