Mysskin Vs Parthiban: உடைந்த பனிப்போர்.. 'ஐயா நான் அப்படி சொல்லல’.. இயக்குநர் பார்த்திபனிடம் பம்மிய மிஷ்கின்!
- Mysskin Vs Parthiban: இயக்குநர் பார்த்திபனை மிஷ்கின் விமர்சித்தார் என்று கூறப்பட்ட நிலையில், அது பற்றி மிஷ்கின் விழா மேடையில் பார்த்திபன் முன்பு வைத்து விளக்கமளித்தார்.
Mysskin Vs Parthiban: இயக்குநர் பார்த்திபனை, முன்பு மிஷ்கின் விமர்சித்தார் என்று கூறப்பட்ட நிலையில், ’ஹிட் லிஸ்ட்’ பட மேடையில் பார்த்திபனை நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட மிஷ்கின், அது குறித்து விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத் குமார், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்த ’ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் மற்றும் படக்குழுவின கலந்துகொண்டனர்.
கோயில் சர்ச்சை குறித்து பேசிய மிஷ்கின்:
அப்போது விழா மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘’போன மேடையில் சினிமாவுக்கு போங்க.. கோயிலுக்குப் போகாதீங்கன்னு சொன்னதை பெரிய சர்ச்சையாக மாற்றிவிட்டார்கள். ஐயா, நான் கோயில் எனச் சொன்னது மசூதி, தேவாலயம் என அனைத்தையும் சேர்த்து தான் சொன்னேன். நான் பிறந்தது ஒரு இந்து குடும்பம். என்னை வளர்ந்தது ஒரு இஸ்லாமியக் குடும்பம். என் மனைவி ஒரு கிறிஸ்தவர். நான் ஏன் கோயிலுக்குப் போகாதீங்கன்னு சொன்னேன் என்றால், கோயிலுக்கு காலையிலேயே போய்டுறோம். காலையில் எழுந்ததும் அம்மா, அப்பாவைப் பார்க்கிறோம். காலையில் எழுந்தும் நம் உறவுகளைப் பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் தான் நம் கோயில்.
நான் தியேட்டருக்குப் போகணும்னு சொன்னேன் ஏனென்றால், தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கிறது. இது தான் நிஜம். எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு செல்போனுக்குள்ள, ரிமோட் கண்ட்ரோலுக்குள்ள, ஒரு விநாடிக்கு 30 சேனல்களை மாத்தச் சொல்றவரை மாறிடுச்சு. அப்போது நாம் தியேட்டரை மறந்துவிடுகிறோம்.
இயக்குநர் பார்த்திபன் சார் மீது எனக்கு எப்போதும் மதிப்பு இருக்கிறது. அவரைப் பற்றி நான் தவறாக விமர்சித்ததாக சிலர் கூறுவது ஏற்புடையது அல்ல. நான் அவரைப் பொதுவெளியில் அப்படி எப்போதும் பேசியது கிடையாது.
நான் தனியறையில் இருக்கும்போது இளையராஜாவையும் மணிரத்னத்தையும் விமர்சிக்கும் உரிமை என்னிடம் இருக்கிறது ஐயா. நம்ம வீட்டில் எல்லோரும் பண்றது. நான் என்ன பார்த்திபன் சாரை பற்றி பேசினேன் எனத்தெரியவில்லை. ஆனால், உங்களது ‘புதிய பாதையை’ நான் எப்போதுமே கோயிலாக கும்பிட்டுக்கொண்டே இருப்பேன் ஐயா. நீங்களும் ஒரு கடவுள் தான். ஒருவேளை நான் தெரியாமல் ஏதாவது பேசியிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன். அப்படி பேசியிருக்கமாட்டேன். ஒரு மனிதனைப் பற்றி, இன்னொரு மனிதனிடம் போய் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவன் கடுமையான கோழை போன்றவன்’’எனச் சொன்னார்.
’சூர்யவம்சம் 2’ பற்றி பேசிய நடிகர் சரத்குமார்:
அதன்பின் விழா மேடையில் இருந்த நடிகர் சரத்குமார் பேசியதாவது, ‘’இது ஒரு நாஸ்டாலஜிக் தருணம் எனச் சொல்லணும். கமலா தியேட்டருக்கு வந்தாலே சென்டிமென்ட்லி நல்ல ஒரு இடம் எனச் சொல்வேன். ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வேன். இந்த 25 வயதிலேயும் நான் திடமாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் தான் என்பேன். இங்கு வந்து மிஷ்கின்பேசும்போது எல்லோரும் இறுக்கமாக இருந்தமாதிரி இருந்தீங்க.இது ஒரு சந்தோஷமான நிகழ்வு. குடும்பவிழா என்றால், இது தான் குடும்பவிழா.
சூர்யவம்சம் 2 பண்ணலாம்னு பேசிட்டு இருந்தோம். அது இன்னும் சரியாக வந்து அமையவில்லை. அது சூர்யவம்சம் 2,3,4 இருக்கட்டும் அதை நான் செய்வேன். நான் 150 வயது வரை வாழ்வேன்'' என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்