18 years of Chithiram Pesuthadi: மறக்க முடியுமா "வாளமீனும் விலாங்கு மீனும்" பாடல்! ரவுடியை மனிதனாக மாற்றும் உண்மை காதல்
முதல் படத்திலேயே வித்தியாசமான மேக்கிங்கால் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படம் பாவனாவுக்கும் தமிழ் சினிமாவில் பிரேக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் படங்களில் லிஸ்டில் சித்திரம் பேசுதடி படத்துக்கும் தனியொரு இடமுண்டு. ஏனென்றால் பார்த்து பழக்கப்பட்ட கதையை வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார் இயக்குநர் மிஷ்கின்.
ரொமாண்ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் சித்திரம் பேசுபதடி படம் தான் இயக்குநர் மிஷ்கினும் முதல் படமாகும். அதேபோல் மலையாள நடிகையான பாவனா, மலையாள சினிமாக்களில் நடித்து வந்த நரேன் ஆகியோரும் தமிழில் அறிமுகமான படமாக உள்ளது.
ஏரியா தாதாவுக்கு அடியாளாக வரும் நரேன், பாவானா இடையே ஆரம்பத்தில் மோதல், பின்னர் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. காதலித்த பின் கேங்ஸ்டர் வேலையை விட்டு திருந்தி வாழும் நரேன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள், திருப்பங்கள் தான் படத்தின் கதை.
காதல் தண்டபாணி, டெல்லி கனேஷ், ரவிபிரகாஷ், மகாதேவன் உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள். ஹாலிவுட் படமான ப்யூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட தாக்கத்தால் இந்த படத்தை உருவாக்கியதாக இயக்குநர் மிஷ்கின் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம், ரசிகர்களில் வாய் மொழி விமர்சனத்தாலும், கருத்துகளாலும் பிக் அப் ஆகி திரையரங்கில் 100 நாள்களை கடந்து ஓடியது. வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் திரைக்கதை அமைப்பு, வித்தியாசமான மேக்கிங் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது.
அதே போல் படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய விஷயமாக அமைந்தது. சுந்தர் சி பாபு இசையில் கானா உலகநாதன் பாடியி வாள மீனுக்கும் பாடல் பட்டிதொட்டியை கடந்த உலகெங்கிலும் ஒலித்தது. இந்த பாடலுக்கு நடிகை மாளவிகா நடனமாடியிருப்பார். பாடலின் விஷுவலும் பெரிதாக கவரந்ததோடு, டிவியில் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பான பாடலாக உள்ளது.
இது தவிர இடம் பொருள் பார்த்து, பட்டாம் பூச்சி, மழை மழை போன்ற பாடல்களும் ஹிட்டாகின. சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய பட்ஜெட் படத்துக்கு இணையாக லாபம் சம்பாதித்த படமாக இருந்த சித்திரம் பேசுதடி வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்