ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி

ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி

Marimuthu M HT Tamil
Dec 26, 2024 03:13 PM IST

ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி
ரத்தம் கொதிக்குது.. பகாசூரன் படம் மாதிரி அண்ணா பல்கலையில் நடந்திருச்சு.. அரசு இதைச் செய்யணும்.. இயக்குநர் மோகன்ஜி

அந்த காணொலியில், ‘’ நேற்றில் இருந்து ஒரு செய்தியை பரபரப்பாக மக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. என்னவென்றால், இந்தியாவின் மிக முக்கியமான பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ள இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி, ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்தப் பெண் வந்து வழக்கு கொடுத்து, ரொம்ப பரபரப்பான செய்தியாக ஊடகங்களில் போய்க்கிட்டு இருக்கு.

இப்போது என்ன நடந்திருக்கோ, அதை நான் கடைசியாக எடுத்த ‘பகாசூரன்’படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். அதற்கு என்ன அர்த்தம் என்றால், இப்படியான விஷயங்கள் சமீப காலமாக, மொபைல் வந்தபின், விஸ்வரூபம் எடுத்ததற்குப் பின், ரொம்ப அதிகமாக நடந்திட்டு இருக்கு.

இதைப் பெற்றோர்களுக்குச் சொல்லணும் என்று எடுக்கப்பட்ட படம் தான், பகாசூரன். ஆனால், படம் வெளியானபோது, இவர் கல்லூரிக்கே பெண்களைப் படிக்கப்போகக் கூடாதுன்னு சொல்றார். பிற்போக்குத் தனத்தைப் புகுத்தப் பார்க்கிறார்னு, இதே ஊடகங்கள் தான், படத்தை தவறாகப் பிரசாரம் செய்தது.

படத்தில் சொன்னது அப்படியே நடந்திருக்கு: மோகன்ஜி

இன்னிக்கு படத்தில் சொன்னது தான், அப்படியே நடந்திருக்கு. அந்த மாணவிக்கும், அந்த கல்லூரியைச் சார்ந்த மாணவருக்கும் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது. அவர்கள் இருவரும் ஒதுக்குப்புறமான பகுதியில் தனிமையில் சந்திருக்காங்க. இதை ஞானசேகர் என்னும் நபர், படம்பிடிச்சு, அந்தப் பெண்ணோட அப்பாகிட்ட காட்டிருவேன், புரொஃபசர்கிட்ட காட்டி உங்களை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யவைச்சிடுவேன்னு சொல்லி, மிரட்டி, அந்தப் பெண்ணை தன்னுடைய பாலியல் இச்சைக்கு சம்மதிக்க சொன்னதாகவும், அப்பெண் மறுக்கும்போது அந்தப் பையனைபோட்டு அடிச்சு, பின்னர் அந்தப் பெண்ணின் சம்மதம் வாங்கி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வழக்காகப் பதிவாகியிருக்கு.

தனி நபரால் எப்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழையமுடியும்:

எனக்கு என்ன சந்தேகம் என்றால், ஒரு தனி நபர் அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் எளிதில் நுழைந்து இப்படி செய்திட முடியாது. இந்த வழக்கிலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நபரின் தூண்டுதல் இருக்கலாம். அதை ஞானசேகரன் மாதிரியான ஆட்கள் மூலமாக செய்திட்டு இருக்காங்க என்பது என் சந்தேகம். காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து, அவருக்கு பின் இருக்கும் நபரை வெளியில் கொண்டு வரணும்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அட்வைஸ் செய்யுங்க. எந்தெந்த கல்லூரிகளில் எல்லாம் பெண்கள் விடுதி இருக்கோ, அங்கு எல்லாம் சிசிடிவி கேமரா வைக்கணும்னு கோரிக்கை விடுக்கிறேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கிற கேமரா ஒர்க் ஆகலைன்னு சொல்றமாதிரி எல்லாம் சொல்லக் கூடாது. கண்டிப்பாக வைக்கணும்.

அந்த ஃபுட்டேஜ் எல்லாம் அருகில் இருக்கும் காவல் நிலையத்திலும் ரெக்கார்டு ஆகிற மாதிரி செய்யணும். அவங்க அதை கண்காணிக்கும் வழிவகைகளை செய்து கொடுக்கணும்.

சின்ன வேலை செய்யும் கேவலமான மனிதப் பிறவிகள்: மோகன்ஜி

இது ஒன்றிரண்டு கிடையாதுங்க. நல்ல காலேஜ் என நம்பும் பல கல்லூரிகளில், சின்ன வேலை செய்யும் கேவலமான மனிதப் பிறவிகள் பெண்களைப் படம் பிடிச்சு, இருவருக்கும் இடையில் இருக்கும் பெர்ஷனலை படம் பிடிச்சு மிரட்டி, சிலர் தவறாகப் பயன்படுத்திட்டு இருக்காங்க. இது எனக்குக் கிடைத்த தரவுகளை வைத்துதான், பகாசூரன் படம் எடுத்தேன்.

இது இன்னொரு பெண்ணுக்கு இப்படி நடக்கக் கூடாது. இந்த நியூஸெல்லாம் கேட்கக்கேட்க ரத்தம் கொதிக்குது. தயவு செய்து பெற்றோர்கள், பெண்கள் விழிப்புணர்வாக இருங்க. தமிழக அரசு, சிசிடிவியை பெண்கள் விடுதி அருகே வைத்து அதை காவல்நிலையத்தில் கண்காணிக்கும்படிசெய்யவேண்டும்''என பகாசூரன் மற்றும் திரெளபதி படங்களை எடுத்த இயக்குநர் மோகன்ஜி கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.