BJP PMK Alliance: MBBS +IPS கூட்டணியா? ஜாதிவெறி+மதவெறி கூட்டணியா? மோகன்ஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
”BJP-PMK alliance: இதுவரை தொகுதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இடம்பெறவில்லை. ராஜ்ய சபா சீட் பாமகவுக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஒப்பந்தத்தில் ஏதும் குறிப்படப்படவும் இல்லை”
பாமக-பாஜக கூட்டணி தொடர்பாக இயக்குநர் மோகன்ஜி பதிவிட்ட பதிவு சமூகவலைத்தளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
பாஜக-பாமக கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் பாமக-பாஜக கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் கைழுத்தாகி உள்ளது.
தனித்தனியே ஆலோசனை
முன்னதாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக தைலாபுரம் இல்லத்தில் உள்ள தனி அறையில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியொர் உடன் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
எந்தெந்த தொகுதி
தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்புத்தூர், மத்திய சென்னை உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை தொகுதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இடம்பெறவில்லை. ராஜ்ய சபா சீட் பாமகவுக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஒப்பந்தத்தில் ஏதும் குறிப்படப்படவும் இல்லை.
அன்புமணி பேட்டி!
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,பத்து ஆண்டுகளாக பாமக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக-தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து வரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
நாட்டின் நலன் கருதி, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர, நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம். இந்த முடிவுக்கு பிறகு 60 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது.
மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதை பூர்த்தி செய்யத்தான், நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். மாண்புமிகு பிரதமர் அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.
அண்ணாமலை பேட்டி!
பின்னர் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான பாமக நம்முடைய பாரத பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்தி 400 இடங்களை தாண்டி வெற்றி பெறும் வேள்வியோடு களம் இறங்கி உள்ளனர். இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக உள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக தலைவர்களின் அன்பை முழுமையாக பெற்றவர் ஐயா ராமதாஸ் அவர்கள்.
ஐயா யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை மோடி அவர்கள் இந்தியாவில் செயல்படுத்தி வருகிறார். அன்புமணி ராமதாஸ் அவர்கள் அற்புதமான மாற்று அரசியலை கொண்டு வர துடித்துக் கொண்டிருக்குக்கிறார். நம் வலிமையான கூட்டணி மக்களை நம்பி இக்கூட்டணியை ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடு களம் இறங்கி உள்ளோம்.
பாமக தலைவர்களுக்கு நன்றியை கூறி கொள்கிறோம். தமிழ்நாட்டின் அரசியல் முற்றிலுமாக மாற்றி உள்ளது. 2024இல் மாபெரும் வெற்றி 2026 ஆம் ஆண்டில் வெற்றி கிடைக்கும்.
இயக்குநர் மோகன் ஜி ட்வீட்
இந்த நிலையில் பாமக-பாஜக கூட்டணி குறித்து இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களை பகிர்ந்துள்ள மோகன் ஜி எம்பிபிஎஸ் + ஐபிஎஸ் கூட்டணி என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு ஆதரவாகும், எதிராகவும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சாதிவெறியும், மதவெறியும் ஒன்றாக சேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனர்.
டாபிக்ஸ்