“நான் அப்படி செய்திருக்கக் கூடாது.. ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்”.. சரணடைந்த இயக்குநர்
பழனி பஞ்சாமிர்தம் குறித்த கருத்துகளை விசாரிக்காமல் கூறிவிட்டேன். அதற்காக ஆழ்மனதிலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளது எனக் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களின் இயக்குநரான மோகன் ஜி.
இது வைரலான நிலையில், அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்த நிலையில், மோகன் ஜி தனது சோசியல் மீடியா தளங்களில் பழநி பஞாசமிர்தம் பற்றிய அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,
ஐபிசி தமிழில் பேட்டி
"கடந்த செப்டம்பர் 20ம் தேதி பழநி பஞ்சாமிர்தம் குறித்து ஐபிசி தமிழ் யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருந்தேன். அந்தப் பேட்டி குறித்து, நான் அவதூறு பரப்புவதாக பழநி அடிவார காவல் நிலையத்தில் என் மேல் வழக்கு பதிவு செய்திருந்தாங்க. அதற்காக நான் பெயில் அப்ளை பண்ணிருந்தேன். அதுகுறித்த காணொலி தான் இது. வெறுமனே செவி வழி செய்தியாக நான் கேள்விப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தாமல், தீர விசாரிக்காமல் நான் காணொலியில் பஞ்சாமிர்தம் குறித்து பேசி இருக்கக் கூடாது. அதனால் தான் என் மீது வழக்கு.
