Vidaamuyarchi: ‘கெரியரையே மாத்த போற படம்.. சிவா மாதிரி உங்களோடவும் நிறைய படம் பண்ணுவேன்னு அஜித் சொன்னாரு’- மகிழ்திருமேனி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: ‘கெரியரையே மாத்த போற படம்.. சிவா மாதிரி உங்களோடவும் நிறைய படம் பண்ணுவேன்னு அஜித் சொன்னாரு’- மகிழ்திருமேனி

Vidaamuyarchi: ‘கெரியரையே மாத்த போற படம்.. சிவா மாதிரி உங்களோடவும் நிறைய படம் பண்ணுவேன்னு அஜித் சொன்னாரு’- மகிழ்திருமேனி

Malavica Natarajan HT Tamil
Jan 24, 2025 01:29 PM IST

Vidaamuyarchi: விடாமுயற்சி படத்திற்கு பின்னும் நாம் சேர்ந்து இன்னும் நிறைய படங்களில் பணியாற்றுவோம் என அஜித் சார் என்னிடம் சொன்னார் என்று இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

Vidaamuyarchi: ‘கெரியரையே மாத்த போற படம்.. சிவா மாதிரி உங்களோடவும் நிறைய படம் பண்ணுவேன்னு அஜித் சொன்னாரு’- மகிழ்திருமேனி
Vidaamuyarchi: ‘கெரியரையே மாத்த போற படம்.. சிவா மாதிரி உங்களோடவும் நிறைய படம் பண்ணுவேன்னு அஜித் சொன்னாரு’- மகிழ்திருமேனி

என்ன வேணும்ன்னாலும் ஆகலாம்

அதன்படி, மகிழ் திருமேனி தி ஹிந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், "அஜித் சார் ரேஸ்க்கு கிளம்புறதுக்கு முன்னாடி என்கிட்ட சொன்னாரு. நான் ரேஸ்க்கு போறேன். அதுனால படத்துல என்ன சீன் எல்லாம் எடுக்கனுமோ அது எல்லாத்தையும் இப்போவே எடுத்துருங்க. நான் ரேஸ்க்காக ட்ரெயினிங் போனபோதே 2 டைம் ஆக்சிடென்ட் ஆச்சு. நான் இந்த ரேஸ்ல கலந்துகிட்டா என்ன வேணும்ன்னாலும் ஆகலாம்.

100 சதவீதம் இருக்கணும்

நான் ஆக்ஸிலேட்டர்ல கால் வைக்கும் போது 100 சதவீதம் முழுசா என்னோட பங்கை தரணும். ஐயோ இந்த படத்துல இன்னும் கொஞ்சம் சீன் மீதி வச்சிருக்கோம். இதெல்லாம் நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைன்னு என் மனசுக்குள்ள தோண ஆரம்பிச்சிடுச்சின்னா அந்த ஸ்பீடு 90 சதவீதமா குறைஞ்சிடும். நானும் ரொம்ப கவனமாக வண்டி ஓட்ட ஆரம்பிச்சிடுவேன். அதுனால மொத்த படமும் அதுக்குள்ள எடுத்து முடிக்கலாம். என்ன நம்பி எத்தனை பேர் வேலை செய்யுறாங்க. அவங்க என்னால பாதிக்கப்படக் கூடாதுன்னு சொன்னாரு.

படம் ரிலீஸ் நாள் பண்டிகை ஆகும்

நான் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலன்னு ரொம்ப பீல் பண்ணி சார்கிட்ட பேசுனேன். அப்போ அவரு தான் என்ன சமாதானம் பண்ணுனாரு. இதுக்கு எல்லாம் வருத்தப்படாதீங்க. விடாமுயற்சி படம் பண்டிகை நாளுல வரலைன்னா என்ன படம் ரிலீஸ் ஆகுற நாளே பண்டிகையா மாறும்.

விடாமுயற்சிங்குற பேருக்கே ஒரு பவர் இருக்கு. அந்தே பேரு நாம்மளோட பொறுமைய சோதிச்சு பாக்குது. நாம அந்த படத்தோட தலைப்ப யன்படுத்த நாம தகுதியானவங்க தானான்னு சோதிச்சு பாக்குதுன்னு சொல்லுவாரு. அதை நாம நிரூபிச்சு காட்டணும்ன்னு அவர் எங்களுக்கு ஊக்கம் கொடுத்தாரு.

கெரியர்லயே பேர் சொல்லும் படம்

அஜித் சார் என்ன மட்டும் இல்ல படத்துல வேலை செஞ்ச டெக்னீசியன்ஸ் எல்லார்கிட்டயும் சொன்னாரு. என்னோட வார்த்தைய எல்லாரும் கவனமா நியாபகம் வச்சிக்கோங்க. இந்தப் படம் நம்மளோட கெரியர்லயே பேர் சொல்லும் படமா அமையப் போகுது. இந்தப் படம் நான் நினைச்சத விட நல்லா வந்திருக்கு. இந்த மாதிரி படத்த தான் நான் பண்ண விரும்புனேன்ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

சினிமாவ விட்டே போறேன்

இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள்ல எதாவது ஒரு சீன் திரும்ப ரீ ஷூட் பண்ணிருக்காங்கன்னு யாராவது நிரூபிச்சா நான் சினிமாவ விட்டே போகத் தயார்ன்னு அவரு சொன்னது என் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு. இப்படி அவரு சொன்னதால பொய் சொல்லுறதாவது குறையும் தான. அதுமட்டுமில்லாம எனக்கும் அஜித் சாருக்கும் சண்டன்னு சொல்லுவாங்க.

அதிக படம் பண்ணுவோம்

இவங்க எல்லாம் இப்படி சொல்ல சொல்ல எனக்கும் அஜித் சாருக்கும் நட்பு இன்னும் அதிகமாகவும் உறுதியாகவும் ஆச்சு.

அஜித் சார் என்கிட்ட சொன்ன விஷயத்த இப்போ சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல. அவர் என்கிட்ட மகிழ் நாம சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பண்ண போறோம். இது தான் நான் டைரக்டர் சிவாகிட்டயும் சொன்னேன், வினோத் கிட்டயும் சொன்னேன். உங்ககிட்டயும் சொல்றேன்னு சொன்னாரு. இதவிட வேற என்ன வேணும்" எனக் கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.