மணிரத்னத்தின் 7 அசத்தல் ஹிட் படங்கள்! தக் லைஃப் ரிலீஸிற்கு முன் இந்தப் படத்தை எல்லாம் பாருங்க!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் நாளை (ஜூன் 5) வெளியாக உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த லெஜண்டரி இயக்குனர் இயக்கியுள்ள சூப்பர் ஹிட் படங்கள் யாவை? அவற்றை எந்த ஓடிடி தளத்தில் காணலாம் என்பதை அறியுங்கள்.

மணிரத்னம்... இந்தியா போற்றும் இயக்குனர்களில் ஒருவர். அப்படிப்பட்ட இயக்குனரிடமிருந்து தற்போது தக் லைஃப் திரைப்படம் வெளிவர உள்ளது. 1987க்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் இது. வரும் வியாழக்கிழமை (ஜூன் 5) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த லெஜண்டரி இயக்குனர் இயக்கியுள்ள சிறந்த திரைப்படங்களை ஒருமுறை பார்க்கலாம்.
1. நாயகன் - அமேசான் பிரைம்
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் எல்லா காலத்திற்கும் பொருந்தும் மாபெரும் வெற்றிப்படம், கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த படம் நாயகன். அதுமட்டுமல்லாமல், அவரது திரைப்படங்களில் அதிகபட்ச ஐஎம்டிபி மதிப்பெண் 8.6 ஐப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம். இதில் கமல்ஹாசனின் நடிப்பு உச்சம் என்று சொல்லலாம். ஒரு காலத்தில் பாம்பேயை அச்சுறுத்திய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.