Director Maniratnam: 'அலைபாயுதே படத்தில் நான் நினைத்தது நடக்கல'- மணிரத்னம் சொல்வது என்ன?
Director Maniratnam: அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் இயக்க முதலில் திட்டமிட்டு, பின் அந்த யோசனையைக் கைவிட்டதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Director Maniratnam: தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய படங்கள் மக்களிடம் பல மேஜிக்குகளை செய்துள்ளது. அப்படி 2000ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு செய்திருந்தாலும் இன்னும் அதன் தாக்கத்தை நிறுத்தாமல் உள்ளது. இளைஞர்களின் விரும்பும் காதல் கதையாக அந்தப் படம் இன்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
நிறைவேறாத மணிரத்னம் ஆசை
ஆனால், அந்தப் படத்தை தான் நினைத்து போல் இயக்க முடியவில்லை என அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் நேற்று (ஜனவரி 25) மும்பையில் நடந்த G5A ரெட்ராஸ்பெக்டிவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிரத்னம் இதனை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம், " 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் இயக்க முதலில் திட்டமிட்டதாகவும், ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எப்படி அமைப்பது என்று தெரியாமல் அந்த யோசனையைக் கைவிட்டதாகவும் கூறினார்.