'நானும் மணிரத்னமும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம்' - அமீர் கான் சொன்ன கதை என்ன?
மணிரத்னத்தைப் பாராட்டிய அமீர் கான், "நான் அவரது படைப்புகளின் மிகப்பெரிய ரசிகன். ஒரு நாள், அவரும் நானும் இணைந்து பணியாற்றுவோம் என இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சகமால இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே அன்பான பிணைப்பு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை. அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து, சாத்தியமான திட்டங்களைப் பற்றி விவாதித்திருந்தாலும், இருவரும் எதிர்பார்த்தபடி விஷயங்கள் ஒருபோதும் நிறைவேறவில்லை.
சமீபத்தில் கலாட்டா ப்ளஸூக்கு அளித்த நேர்காணலில் பேசிய அமீர் கான், ஒரு திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற விரும்பினோம். ஆனால், அது கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அமீர் கான் அளித்துள்ள பேட்டியில், "புகழ்பெற்ற இந்திய உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் சிறுகதையான கர்வாலி (தி ஹோம்வைஃப்)-ஐ அதன் கதாநாயகன் லஜ்ஜோவை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படமாக மாற்றுவதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம். நான் எப்போதும் மணிரத்னத்தின் மிகப்பெரிய ரசிகன். எப்போதுமே அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன்.