LokeshKanagaraj: ‘ஹெல்மெட்ட போடுங்க சாரே.. கார் சாகச நிகழ்ச்சியில் லோகேஷ்! - வைரல் போட்டோஸ் இங்கே!
LokeshKanagaraj: தனியார் நிறுவனம் நடத்திய கார் சாகச நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்று இருக்கிறார்.

LokeshKanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற MotoJam நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். முழுக்க, முழுக்க பைக் மற்றும் கார் சாகசங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், முன்னணி கார் மற்றும் பைக் சாகசங்கள் செய்யும் கலைஞர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம் நாமும் ஒரு ரைடு போலாம் என்று நினைத்த லோகேஷ் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தின் பின்னணி வேலைகளில் மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்து வந்தார். இப்படம் ரஜினிகாந்தின் திரைவரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்வது வருகிறார். கடந்தாண்டு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று அண்மையில் படக்குழு அறிவித்துள்ளது.
கூலி திரைப்படத்தில் தென்னிந்திய நடிகர்கள் பலர் நடித்திருக்கின்றனர். ’மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகர் செளபின் சாஹீர், ’தயாள்’ என்னும் கதாபாத்திரத்திலும், தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா ’சைமன்’ என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். அதேபோல், நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதி ஹாசன் ’பிரீத்தி’ என்னும் கதாபாத்திரத்திலும், நடிகர் சத்யராஜ் ’ராஜசேகர்’ என்னும் கதாபாத்திரத்திலும், முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா, ’காளீஸா’ என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். மிகமுக்கியமாக ரஜினிகாந்துக்கு ’தேவா’ என்னும் கதாபாத்திரப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேவா என்பது ’தளபதி’ படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட லோகேஷ் அடுத்தப்படத்தில் அதனை திருத்திக்கொள்வதாக கூறியிருந்தார்.
லோகேஷ் கனகராஜூக்கு ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்வதால் கடைசி நேரத்தில் தான் நினைத்தபடி காட்சிகளை கொண்டுவரமுடியவில்லை என்று கூறியிருந்தார். அதனாலாயே கூலி படத்தின் ரிலீஸ் தேதி படத்தின் ஷூட்டிங்கெல்லாம் முடிந்த பின்னரே அறிவிக்கப்பட்டது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்