'ஸ்ரீ பத்தின கேள்வி என்ன நெறைய பாதிச்சிடுச்சி.. அதுனால நான் போயிட்டேன்'- லோகேஷ் கனகராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'ஸ்ரீ பத்தின கேள்வி என்ன நெறைய பாதிச்சிடுச்சி.. அதுனால நான் போயிட்டேன்'- லோகேஷ் கனகராஜ்

'ஸ்ரீ பத்தின கேள்வி என்ன நெறைய பாதிச்சிடுச்சி.. அதுனால நான் போயிட்டேன்'- லோகேஷ் கனகராஜ்

Malavica Natarajan HT Tamil
Published May 01, 2025 11:45 AM IST

நடிகர் ஸ்ரீ பத்தின கேள்விகள் தொடர்ச்சியா என்கிட்ட வந்தது. அது என்னையும் என் வேலையையும் பாதித்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

'ஸ்ரீ பத்தின கேள்வி என்ன நெறைய பாதிச்சிடுச்சி.. அதுனால நான் போயிட்டேன்'- லோகேஷ் கனகராஜ்
'ஸ்ரீ பத்தின கேள்வி என்ன நெறைய பாதிச்சிடுச்சி.. அதுனால நான் போயிட்டேன்'- லோகேஷ் கனகராஜ்

ரொம்ப பாதிச்சது

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சோசியல் மீடியாவை விட்டு தள்ளி இருக்குறதுக்கு காரணமே சுத்தி சுத்தி ஏதாவது ஒரு விஷயம் வந்து தொந்தரவு பண்ணிட்டே இருக்கு. இது என்னோட பட வேலைய ரொம்ப பாதிக்குது. இடையில நடிகர் ஸ்ரீ பத்தின செய்தி எல்லாம் ரொம்ப வர ஆரம்பிச்சது. அதெல்லாம் என்ன ரொம்ப பாதிச்சது. அதுனால இன்னும் 3 மாசத்துல பட வேலை எல்லாம் முடியுற வரைக்கும் பிரேக் எடுக்கலாம்ன்னு இருக்கேன். அவர பாத்தேனா என்னங்குறது எல்லாம் இன்னொரு பேட்டியில சொல்றேன். இப்போதைக்கு அவர் நல்லா இருக்காரு" என்றார்.

சோசியல் மீடியாவிலிருந்து விலகல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் புரொமோஷன் தொடங்கும் வரை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் என அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், கூலி படத்தின் அப்டேட் எல்லாம் தரமாக வரப் போகிறது என்றும், அது நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக வரும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

நெட்டிசன் விமர்சனம்

மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ உடல் நலமின்றி இருப்பதை அறிந்து லோகேஷிற்கு தொடர்ந்து பலரும் அழுத்தம் கொடுத்ததாகவும் அதனால் தான் இப்போது அவர் எவ்வித தொந்ததரவும் இல்லாமல் கூலி படத்தின் போஸ்ட் புரொடொக்ஷன் பணிகளை பார்க்க உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், இவற்றில் எது உண்மை என்பதை லோகேஷே கூறினால் தான் சரியாக இருக்கும்.

கூலி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

கூலி ஓடிடி ரைட்ஸ்

கூலி திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் உரிமைகள் ரூ.120 கோடி என்ற மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த வெற்றியின் மூலம் விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த அவர், பின்னர் தன்னுடைய ஆதர்ச நாயகன் ஆன கமல்ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்தார்.

லோகியின் எல்சியூ

இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் 300 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்தது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய எல் சி யூ சினிமா யூனிவர்சையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். அதுவும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.