லீட் ரோலுக்காக ரிஸ்க் எடுக்கும் லோகி.. அடுத்தடுத்து படம் இருந்தும் ஹீரோவாக களமிறங்க முயற்சி!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்று வருகிறார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.

லீட் ரோலுக்காக ரிஸ்க் எடுக்கும் லோகி.. அடுத்தடுத்து படம் இருந்தும் ஹீரோவாக களமிறங்க முயற்சி!
மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த வெற்றியின் மூலம் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த அவர், பின்னர் தன்னுடைய ஆதர்ச நாயகன் ஆன கமல்ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்தார்.
லோகியின் எல்சியூ
இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் 300 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்தது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய எல் சி யூ சினிமா யூனிவர்சையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். அதுவும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.