Coolie Movie Update: கூலி படத்துல கண்டிப்பா இது இருக்கும்.. ரஜினி வேற லெவல்.. ஹின்ட் கொடுத்த லோகி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Coolie Movie Update: கூலி படத்துல கண்டிப்பா இது இருக்கும்.. ரஜினி வேற லெவல்.. ஹின்ட் கொடுத்த லோகி..

Coolie Movie Update: கூலி படத்துல கண்டிப்பா இது இருக்கும்.. ரஜினி வேற லெவல்.. ஹின்ட் கொடுத்த லோகி..

Malavica Natarajan HT Tamil
Published Apr 05, 2025 02:44 PM IST

Coolie Movie Update: கூலி படம் எப்படி இருக்கும். அதில் ரஜினி காந்த் எப்படி இருப்பார் என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்துள்ளார்.

Coolie Movie Update: கூலி படத்துல கண்டிப்பா இது இருக்கும்.. ரஜினி வேற லெவல்.. ஹின்ட் கொடுத்த லோகி..
Coolie Movie Update: கூலி படத்துல கண்டிப்பா இது இருக்கும்.. ரஜினி வேற லெவல்.. ஹின்ட் கொடுத்த லோகி..

பெரிய அளவில் ஒப்பந்தம்

தமிழில் ஆக்‌ஷன் படங்களை கொடுத்து வெற்றி பெற்று வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பல மொழி திரைக் கலைஞர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றர். இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும் கூலி படத்தின் ஓடிடி ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் செய்திருக்கும் லோகி

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், உங்களது எல்லா படத்திலும் சாப்பாடு வைத்து சில காட்சிகள் இடம்பெறும். அதேபோல கூலி படத்திலும் காட்சிகள் இடம்பெறுமா என கேட்டனர். அதற்கு யோசித்து பார்த்த லோகேஷ் ஆமாம் இருக்கிறது என்றார்.

மேலும், இந்தப் படத்தில் ரஜினிக்கு பழைய படத்தில் இருந்து ஏதாவது ரெஃபரென்ஸ் ஏதாவது வைத்துள்ளீர்களா எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் இல்லை. அப்படி எந்த ரெஃபரென்ஸும் இல்லை. ஆனால், நீங்கள் இந்தப் படத்தில் வின்டேஜ் ரஜினியை பார்க்க வாய்ப்புள்ளது என்றார்.

ஓடிடி ரைட்ஸ் விலை

கூலி திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் உரிமைகள் ரூ.120 கோடி என்ற மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மிகப்பெரிய அளவிலான ஆர்வம் இருப்பதால், இந்த கூலி படத்திற்கு அந்த அளவிற்கு விலை கொடுக்க பிரைம் வீடியோ முன்வந்துள்ளது.

தங்க கடத்தல் மாஃபியா

கூலி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியானது. இந்த படம் தங்க கடத்தல் மாஃபியா சுற்றி நகரும் என்பது அந்த டீசரில் இருந்தே தெளிவாகிறது. தங்கத்தை முன்னிலைப்படுத்தி இந்த டீசர் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் பாணியிலான ஆக்‌ஷன் படமாகவே இருக்கும். ஆனால், லோகேஷ் கனகராஜ் சினிமா யுனிவர்ஸ் (எல்.சி.யூ) இல் இந்த படம் இடம் பெறாது.

300 கோடி பட்ஜெட்?

கூலி படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

கூலி படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹீரோ ஆமிர் கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது இந்த நிலையில் தான் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடனம் ஆட உள்ளதாக படக்குழு அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளது.

கூலி படத்தின் கேரக்டர்கள்

கூலி திரைப்படத்தில் தென்னிந்திய நடிகர்கள் பலரும் நடித்திருக்கின்றனர். ’மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகர் செளபின் சாஹீர், ’தயாள்’ என்னும் கதாபாத்திரத்திலும், தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா ’சைமன்’ என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். அதேபோல், நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதி ஹாசன் ’பிரீத்தி’ என்னும் கதாபாத்திரத்திலும், நடிகர் சத்யராஜ் ’ராஜசேகர்’ என்னும் கதாபாத்திரத்திலும், முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா, ’காளீஸா’ என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். மிகமுக்கியமாக ரஜினிகாந்துக்கு ’தேவா’ என்னும் கதாபாத்திரப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேவா என்பது ’தளபதி’ படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner