ரெடியானது ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. 6 மணிக்கு ரெடியா இருங்க.. மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரெடியானது ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. 6 மணிக்கு ரெடியா இருங்க.. மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..

ரெடியானது ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. 6 மணிக்கு ரெடியா இருங்க.. மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..

Malavica Natarajan HT Tamil
Dec 12, 2024 01:24 PM IST

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

ரெடியானது ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. 6 மணிக்கு ரெடியா இருங்க.. மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..
ரெடியானது ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. 6 மணிக்கு ரெடியா இருங்க.. மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..

தேவா பர்த்டே ட்ரீட்

கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று மாலை 6 மணிக்கு தேவாவின் பிறந்தநாள் ட்ரீட்டைக் காணத் தயாராக இருங்கள் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு வீடியோ கிளிப்பையும் வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அதே சமயம், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணி என்று மட்டும் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படமான கூலியில் பல்வேறு திரைப் பிரபலங்களும் நடித்துள்ளனர், அத்துடன் இது லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் இசை

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிட்டு வந்த நிலையில், படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி ரிலீஸ் எப்போது?

தற்போது கூலி படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வரும் 2025ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட படப்பிடிப்பு

கடந்த ஜூலை மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.

ரஜினிக்கு சிகிச்சை

இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் நடந்த படபிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்தசமயத்தில் கூலி படத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அதில் அமீர்கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீக்கான காட்சிகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நாகார்ஜுனா சைமன் என்ற முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த சமயத்தில், நாகார்ஜூனாவின் சண்டைக் காட்சியை காட்சியை ரசிகர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து ஆன்லைனில் லீக் செய்து படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.