சோசியல் மீடியாவிற்கு ரெஸ்ட் விட்ட லோகேஷ் கனகராஜ்.. காரணங்களை அடுக்கும் நெட்டிசன்ஸ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சோசியல் மீடியாவிற்கு ரெஸ்ட் விட்ட லோகேஷ் கனகராஜ்.. காரணங்களை அடுக்கும் நெட்டிசன்ஸ்..

சோசியல் மீடியாவிற்கு ரெஸ்ட் விட்ட லோகேஷ் கனகராஜ்.. காரணங்களை அடுக்கும் நெட்டிசன்ஸ்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 22, 2025 07:31 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் புரொமோஷன் பணிகள் தொடங்கும் வரை சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார்.

சோசியல் மீடியாவிற்கு ரெஸ்ட் விட்ட லோகேஷ் கனகராஜ்.. காரணங்களை அடுக்கும் நெட்டிசன்ஸ்..
சோசியல் மீடியாவிற்கு ரெஸ்ட் விட்ட லோகேஷ் கனகராஜ்.. காரணங்களை அடுக்கும் நெட்டிசன்ஸ்..

லோகியின் எல்சியூ

இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் 300 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்தது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய எல் சி யூ சினிமா யூனிவர்சையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். அதுவும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

ரஜினியுடன் இணைந்த லோகி

அதையெல்லாம் களையும் வகையில் தான் தற்போது அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கும் கூலி படத்தை உருவாக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் மும்மரமாக பணியாற்றி வருகிறார். ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக அவர் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சோசியல் மீடியாவிலிருந்து விலகல்

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் புரொமோஷன் தொடங்கும் வரை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் என அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், கூலி படத்தின் அப்டேட் எல்லாம் தரமாக வரப் போகிறது என்றும், அது நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக வரும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

நெட்டிசன் விமர்சனம்

இன்னும் சிலர், இவர் எப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்தார் இப்போது ரெஸ்ட் எடுக்கிறார் என கிண்டலும் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ உடல் நலமின்றி இருப்பதை அறிந்து லோகேஷிற்கு தொடர்ந்து பலரும் அழுத்தம் கொடுத்ததாகவும் அதனால் தான் இப்போது அவர் எவ்வித தொந்ததரவும் இல்லாமல் கூலி படத்தின் போஸ்ட் புரொடொக்ஷன் பணிகளை பார்க்க உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், இவற்றில் எது உண்மை என்பதை லோகேஷே கூறினால் தான் சரியாக இருக்கும்.

கூலி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

கூலி ஓடிடி ரைட்ஸ்

கூலி திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் உரிமைகள் ரூ.120 கோடி என்ற மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.