Director lingusamy: அட்டர் ஃப்ளாப் ஆன அஞ்சான்.. வறுத்தெடுத்து கண்டமாக்கிய நெட்டிசன்ஸ்! - உடைத்து பேசிய லிங்குசாமி!
நான் எப்போதுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய திரைப்படம் வெளியாகும் பொழுது, நான் சென்னைக்கு வந்து ரோகிணி தியேட்டர் அருகில் அமர்ந்தது, கிணற்றில் தண்ணீர் எடுத்து குளித்தது, கடன் வைத்து சூடாக இட்லி சாப்பிட்டது உள்ளிட்ட பலவை நினைவுக்கு வரும்.
சூர்யாவுடன் தான் இணைந்த அஞ்சான் பட தோல்வி அடைந்தது குறித்தும், தன் மீது தொடுக்கப்படும் நெகட்டிவான கமெண்டுகள் குறித்தும் இயக்குநர் லிங்குசாமி அண்மையில் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “வெளியில் இருந்து பார்ப்பவர்கள்தான் என்னுடைய வெற்றி தோல்வியை எடை போடுவார்கள். என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு அம்சத்தை நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
நான் எப்போதுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய திரைப்படம் வெளியாகும் பொழுது, நான் சென்னைக்கு வந்து ரோகிணி தியேட்டர் அருகில் அமர்ந்தது, கிணற்றில் தண்ணீர் எடுத்து குளித்தது, கடன் வைத்து சூடாக இட்லி சாப்பிட்டது உள்ளிட்ட பலவை நினைவுக்கு வரும்.
சினிமா எனும் மாய உலகுக்குள் நாம் நுழைந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருந்தவன் நான். ஆனால் பின்னாளில், மணிரத்னம் வீட்டில் இயக்குநர்களுடன் நான் பொழுதை கழித்த போது பூரித்து மகிழ்ந்தேன்.
சமீபத்தில் சில கமெண்டுகளை பார்த்தேன். என்னை மிகவும் மோசமாக திட்டி தீர்த்து இருந்தார்கள். அவர்கள் திட்டிய பிறகு உலகத்தில் இனி திட்டுவதற்கு ஏதும் புதிதான வார்த்தைகள் இருக்கிறதா என்ற கேள்வி எனக்கு வந்துவிட்டது. ஆகையால் திட்டுபவன் அப்படியே தான் இருக்கப் போகிறான்.
நாம் பாசிட்டிவாக இருந்து நம்முடைய வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அஞ்சான் தோல்வி அடைந்த சமயத்தில் என்னைப்பற்றி அவ்வளவு மீம்கள் வந்தன.
சாக்கடையில் சகதியில் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு நாய் ஒன்று இயேசுநாதர் மற்றும் அவரது சிஷ்யர்கள் கண்ணில் பட்டது. அப்போது இயேசு நாதர் சூரிய ஒளியில் நாய் பற்கள் மின்னுவதை பார்த்து அவை முத்துக்கள் போல இருக்கின்றன என்று சொன்னார். ஆகையால் எல்லாம் நம்முடைய பார்வையில்தான் இருக்கிறது” என்று பேசினார்.
டாபிக்ஸ்