‘ரஜினி ஒரு சுயநலவாதி.. அவருக்கு பணம் வந்தே ஆகணும்; ஆனா கமல் அப்படி இல்ல’ - உடைத்து பேசும் இயக்குநர் கே.ஆர்!
‘ரஜினி ஒரு சுயநலவாதி.. அவருக்கு பணம் வந்தே ஆகணும்; ஆனா கமல் அப்படி இல்ல’ - உடைத்து பேசும் இயக்குநர் கே.ஆரின் பேட்டியை பார்க்கலாம்.
ரஜினி சார் சுயநலவாதி என்றும் கமல் ஒரு பொதுநலவாதி என்றும் பிரபல இயக்குநர் கே.ஆர் பேசி இருக்கிறார்.
ரஜினி சார் ஒரு சுயநலவாதி
இது குறித்து அவர் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசும் போது, ‘ரஜினி சார் ஒரு சுயநலவாதி; அவர் எப்போதும் அவர் ஜெயிக்க வேண்டும், அவரை நம்பி காசு போட்ட தயாரிப்பாளர் ஜெயிக்க வேண்டும். படம் வாங்கியவர்கள் ஜெயிக்க வேண்டும்.சம்பளம் சரியாக வர வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி மட்டுமே யோசிப்பார். அது அவருக்கு சரியான விஷயம்; அதனால், அதை அவர் செய்கிறார். உண்மையில் அவர் ஒரு நாளில் சுருக்கி காட்சிகளை எடுத்தால் கூட, நல்லது என்றுதான் நினைப்பார்.
ஆனால் கமல் பொதுநலவாதி. அவர் தொடர்ந்து பரிச்சாத்த முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார். அந்த படம் ஓடுகிறதோ ஓடவில்லையோ அவர் அவருக்கான பாணியில் பயணம் செய்து கொண்டே இருப்பார். குறிப்பாக, அவர் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஜெயிக்க வேண்டும் தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று யோசிப்பார்.