Kiruthika Udhayanidhi Exclusive: 'காதல்ல தேவை மாறிட்டே இருக்கும்.. எல்லாம் அனுபவம் தான்'- கிருத்திகா உதயநிதி
Kiruthika Udhayanidhi Exclusive: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு அளித்த இயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி அளித்துள்ளார்.

Kiruthika Udhayanidhi Exclusive: காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் கிருத்திகா உதயநிதி தனது நான்காவது படைப்பை மக்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் அவர் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. நித்யா மேனன் மற்றும் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை, படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.
கிருத்திகா உதயநிதி
இந்தப் படம் புதியதாகவும், தைரியமாகவும், பல எல்லைகளைக் கடந்து இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. படத்தின் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த கிருத்திகா ஒரு இயக்குநராக இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகளுமான கிருத்திகா, ஒரு இயக்குநராக அவரது பயணம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நம்மிடம் பேசியுள்ளார்.