'இந்த அற்புதமான படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்'.. மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'இந்த அற்புதமான படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்'.. மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

'இந்த அற்புதமான படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்'.. மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

Karthikeyan S HT Tamil
Published Jun 08, 2025 12:12 PM IST

சமீபத்தில் வெளியான மெட்ராஸ் மேட்னி படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

'இந்த அற்புதமான படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்'.. மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!
'இந்த அற்புதமான படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்'.. மெட்ராஸ் மேட்னி படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

இந்நிலையில் படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்து அவர் கூறுகையில்" மெட்ராஸ் மேட்னி திரைப்படம் மனதிற்கு இதம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட்டின் அற்புதமான நடிப்புடன் இயக்குநரின் அற்புதமான அறிமுக படமாக உள்ளது. முழு நடிகர்கள் மற்றும் குழுவினரின் சிறந்த படைப்பு. தயவு செய்து இந்த அற்புதமான திரைப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்" என கூறியுள்ளார்.

ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் அடுக்கடுக்கான தொகுப்புகளை வைத்து மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே. செய்துள்ளார். கே.சி.பாலசங்கரன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் காளி வெங்கட், "முதலில் எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முடியும் தருவாயில்தான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி.

அபிஷேக் மூலம்தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார். அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக் கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.