“நல்ல நேரம் ஆரம்பம்" ரெட்ரோ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் வெளியான ரெட்ரோ படத்திற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து படத்தின் இயக்குனர் எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .

நடிகர் சூர்யாவிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. இப்படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இப்படம் சூர்யாவிற்கு பெரிய கம்பேக் படமாக இருக்கும் என பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படுமோசமாக அமைந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் கடந்த மே 1 அன்று ரெட்ரோ படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் முதல் 2 நாட்களிலேயே நல்ல வசூலையும் குவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியால் கார்த்திக் சுப்பாராஜ் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
ரெட்ரோ
சந்தியாவின் கருணையால் அனாதையாக விடப்பட்ட பாரி சந்தியாவின் கணவர் திலகரிடம் மகனாக தஞ்சம் அடையும் நிலை ஏற்படுகிறது. பாரி திலகரை அப்பாவாக பார்த்தாலும், திலகர் பாரியை தன்னைப் பாதுக்காக்கும் இரும்புக்கை அடியாளாகவே பார்க்கிறான்.