‘ரொம்ப பேராசைபடுறோம்ன்னு தோணுச்சு.. இதெல்லாம் நான் யோசிக்காதது..’ கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ரொம்ப பேராசைபடுறோம்ன்னு தோணுச்சு.. இதெல்லாம் நான் யோசிக்காதது..’ கார்த்திக் சுப்புராஜ்

‘ரொம்ப பேராசைபடுறோம்ன்னு தோணுச்சு.. இதெல்லாம் நான் யோசிக்காதது..’ கார்த்திக் சுப்புராஜ்

Malavica Natarajan HT Tamil
Published Apr 14, 2025 11:55 AM IST

ரஜினி சாரோட ஒரு படம் பண்ணுனதுக்கு அப்புறம் நான் ரொம்ப பேராசை படுறோமோன்னு தோன ஆரம்பித்ததாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

‘ரொம்ப பேராசைபடுறோம்ன்னு தோணுச்சு.. இதெல்லாம் நான் யோசிக்காதது..’ கார்த்திக் சுப்புராஜ்
‘ரொம்ப பேராசைபடுறோம்ன்னு தோணுச்சு.. இதெல்லாம் நான் யோசிக்காதது..’ கார்த்திக் சுப்புராஜ்

சும்மா சும்மா கத சொல்லுவேன்

"பேட்ட படம் எடுக்குற சமயத்துல அவர்கிட்ட அடிக்கடி பேச முடிஞ்சது. ஆனா படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கும் ரஜினி சாருக்கும் நடுவுல கேசுவலா ரெண்டு மூனு டைம் ஒரு கான்வர்சேசன் நடந்தது. அதுக்கு அப்புறம் கூட அவர்கிட்ட பல கதை சொல்லிருக்கேன். ஆனா, ஏதோ ஒன்னு எங்களுக்குள்ள ஒர்க் அவுட் ஆகல. இப்படியே நடந்துட்டு இருக்கும் போது, திடீர்ன்னு எனக்கு என்ன தோணுச்சுன்னா நாம ஏன் அவர்கிட்ட போய் சும்மா கத சொல்லிட்டு இருக்கோம்ன்னு.

பேராசை படுறோம்ன்னு தோனுச்சு

நான் அவரோட ரசிகன் தான். படம் பண்ணிட்டோம் தான். ஆனா ஏன் அவர்கூடவே தொடர்ந்து படம் பண்ணனும். நாம என்ன பேராசை படுறமோன்னு தோணுச்சு. நாம ஒரே மாதிரி திசையில போறோமோன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு. இது எப்படி ஆகிடுச்சுன்னா, நான் ரஜினி சார்கிட்ட பேசுறதுன்னாலே, என்கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவா அப்படிங்குற மாதிரி தான் ஆகிடுச்சு.

ரஜினி சார் பேச வர சொன்னாரு

அதுக்கு அப்புறம் நான் அவர்கிட்ட போன் பண்ணி, சார் நான் கதை சொல்ல எல்லாம் உங்களுக்கு போன் பண்ணல. நான் சும்மா உங்கள பாத்து 10 நிமிஷம் பேசனும். எதப்பத்தி வேணாலும் பேசலாம். நம்ம ரெண்டு பேருக்கும் நடிகர்- இயக்குநர்ங்குற மாதிரியே பேச்சு எல்லாம் மாறிடுச்சு. ஆனா என்னால உங்கள அப்படி பாக்க முடியலன்னு பேசுனதும் அவரு போன் பண்ணி, நாளைக்கே பாக்க வர சொல்லிட்டாரு.

இது தான் பெட்டர்

அப்புறம் நாங்க ஒரு அரை மணி நேரம் பேசினோம். சினிமா பத்தி மட்டும் இல்ல நிறைய பேசினோம். நான் அவர நேர்ல பாத்து போட்டோ எடுக்குறதே பெரிய விஷயமா நெனச்சேன். ஆனா, அவரோட சேர்ந்து ஒரு படமே பண்ணிட்டேன். அதுக்கு அப்புறமும் அடுத்த படம் அடுத்த படம்ன்னு ஓடுனா மெட்டீரியலிஸ்டிக்கா இருக்கும். அதனால இப்படி ஒரு பிரண்ட்ஸ் ஜோன்ல இருக்குறது பெட்டர்ன்னு நான் நெனச்சேன் என்றார்,

சூர்யா சார் கேட்டாரு

பின் தனது வரவிருக்கும் படமான ரெட்ரோ குறித்து பேசுகையில், " சூர்யா சார பாத்து நான் வாவ் இது செமையா இருக்கேன்னு நெனச்சது எப்போன்னா, நான் ரெட்ரோ படத்தோட முதல் பாதி ட்ராஃப்ட் தான் கொடுத்தேன். அப்போ அந்தப் படத்தோட டைட்டில் ரெட்ரோ இல்ல. ஒரு சாதாரண பேர் தான். அத சூர்யா சார் படிச்சதுக்கு அப்புறம், இந்த கதை ஒரு ஹீரோக்கான கதையா இருக்கு. ஆனா எநக்கு ஹீரோவவிட ரொம்ப வல்லரபுளா இருக்க கேரக்டர் வேணும். அது மாதிரி உங்களால இந்த கதைய மாத்த முடியுமான்னு கேட்டாரு.

சர்ப்ரைஸா இருக்கு

அதக் கேட்டதும் எனக்கு சர்ப்ரைஸா இருந்தது. எல்லாரும் ஹீரோயிக் சப்ஜெக்ட் படம் கேப்பாங்க. இவரு அந்த கேரக்டர் ஹீரோ பண்ற மாதிரி எல்லா பிரச்சனையும் சமாளிக்குறாரு. ஆனா அவர சாதாரண மனுஷன் சந்திக்குற பிரச்சனை எல்லாம் கொஞ்சம் கொண்டுவாங்கன்னு சொன்னாரு.

ரொம்ப சரியாபட்டது

அப்ப நான் அவர்கிட்ட ஒரு கதைய சொன்னேன், ஆனா, அவரு வேற ஒரு கேணத்துல ஒரு கதைய சொன்னாரு. அவரு சொன்ன கதைய கேக்கும்போது அது ரொம்ப சரியா பட்டது எனக்கு. அதுக்கு அப்புறம் தான் படத்துல இன்னொரு லேயர் எல்லாம் சேர்த்தேன். அவர் கேட்டப்போ தான் நானே யோசிக்காத விஷயம் எல்லாம் எனக்கு தோணுச்சு.

ரியலா எடுக்க ஆரம்பிச்சேன்

அப்போ தான் சூர்யா சார் ஒரு படத்த எப்படி பாக்குறாருன்னு எனக்கு தெரிஞ்சது. அவரு ஒரு கதைய எப்படி ரியலா யோசிக்குறாரு. ஸ்க்ரிப்ட் எப்படி படிக்குறாருன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்போ சினிமாட்டிக் விஷயத்த குறைச்சு ரொம்ப ரியலா எடுக்க ஆரம்பிச்சேன்." என்றார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.