சினிமாவில் சம்பிரதாயப் பொருளான கிளாப் போர்டு.. காரணம் சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சினிமாவில் சம்பிரதாயப் பொருளான கிளாப் போர்டு.. காரணம் சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

சினிமாவில் சம்பிரதாயப் பொருளான கிளாப் போர்டு.. காரணம் சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

Malavica Natarajan HT Tamil
Published May 10, 2025 10:34 AM IST

ஷூட்டிங்கில் கிளாப் போர்டு பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இப்போது அது சம்பிரதாயப் பொருளாக மாறிப் போனதற்கான காரணம் குறித்தும் விளக்கி உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

சினிமாவில் சம்பிரதாயப் பொருளான கிளாப் போர்டு.. காரணம் சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
சினிமாவில் சம்பிரதாயப் பொருளான கிளாப் போர்டு.. காரணம் சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

சினிமாவும் கிளாப் போர்டும்

அத்தோடு நில்லாமல், படத்தின் தயாரிப்பாளரோ அல்லது முக்கிய பிரபலம் ஒருவரோ கிளாப் போர்டை காட்டி படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைப்பர். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே பாரம்பரியமாக செய்யப்பட்டு வரும் ஒரு விஷயம். படப்பிடிப்பிற்கும் இந்த கிளாப் போர்டிற்கும் என்ன சம்மந்தம் என்று என்றைக்காவது யோசித்து பார்த்ததுண்டா?

ரெட்ரோ படத்திற்கான புரொமோஷன் வேளைகளில் ஈடுபட்டிருந்த அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கலாட்டா மீடியாவிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் ஷூட்டிங்கில் கிளாப் போர்டு பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இப்போது அது சம்பிரதாயப் பொருளாக மாறிப் போனதற்கான காரணம் குறித்தும் விளக்கி உள்ளார்.

யூஸ் இல்லாம போன கிளாப்போர்டு

இதுபற்றி கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், "இப்போ இந்த கிளாப் போர்டுக்கு எல்லாம் இங்க எந்த வேலையும் இல்ல. இப்போ இருக்க பிலிம் மேக்கிங் டெக்னிக்ல கிளாப் போர்டு யூஸ் இல்லாம போயிடுச்சு. நான் பீட்சா படம் பண்ணும் போது கூட கிளாப் போர்டுக்கான யூஸ் இல்லாம தான் இருந்தது. டிஜிட்டல் வந்ததுக்கு அப்புறம் அதுக்கான தேவை இல்லாமலே போயுடுச்சு.

கிளாப் போர்டின் வேலை

அடிப்படையில கிளாப் போர்டோட யூஸேஜ் என்னென்னா பிலிம் யூஸ் பண்ணி ஷூட் பண்ணும் போது சவுண்ட் ஒரு பக்கம் தனியா ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கும். பிலிம் எல்லாம் பிராசஸ் ஆகி முடிச்சிட்டு அதுக்கு அப்புறமா பிலிமையும் சவுண்டையும் மேச் பண்ணனும். அத எங்க மேச் பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக பண்ண ஒரு விஷயம் தான் கிளாப் சவுண்ட்.

இந்த சத்தம் விஷுவலையும் ரெக்கார்ட் ஆகுற சவுண்டையும் மேச் பண்ணி, கரெக்டா மெர்ஜ் பண்ண வைக்கும். கிளாப் பண்ணும் போது வர்ற சவுண்ட் தான் அலைண்ட் மெண்ட்கு வச்சிருப்பாங்க. அதுக்காக தான் கிளாப் போர்ட்ல சீன் பேப்பர்ல இருக்க நம்பர் எல்லாம் கிளாப் போர்டுல நோட் பண்ணுவாங்க.

டிஜிட்டலில் எல்லாம் மாறிடுச்சு

டிஜிட்டல் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் கிளாப் போர்டு எல்லாம் பழங்கால பொருள் மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெட்ரோ படத்துலயும் கிளாப் போர்டு ஒரு ஆண்டிக் புராப்பெர்ட்டி தான். ஆனா எல்லா படத்தோட பூஜையிலயும் ஒரு கிளாப் போர்டு வரும். அதுக்கு அப்புறம் அது எங்க போகுதுன்னே தெரியாது. பாக்குறதும் கிடையாது. பார்மாலிட்டிகாக படத்தோட ஃபர்ஸ்ட் ஷாட் எடுக்கும் போது கிளாப் போர்டு வச்சு ஒரு கிளாப் அடிப்பாங்க. இப்போ அதுக்கெல்லாம் யூஸ் இல்லவே இல்ல." என்கிறார்.