Director K Bhagyaraj: ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிராஜா கொடுத்த அவமானம்.. லெட்டர் எழுதி நடையை கட்டிய பாக்யராஜ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director K Bhagyaraj: ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிராஜா கொடுத்த அவமானம்.. லெட்டர் எழுதி நடையை கட்டிய பாக்யராஜ்!

Director K Bhagyaraj: ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிராஜா கொடுத்த அவமானம்.. லெட்டர் எழுதி நடையை கட்டிய பாக்யராஜ்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 27, 2024 05:30 AM IST

அதனால் உதவி இயக்குநரை திட்டுவது போல திட்டி, தயாரிப்பு தரப்பை மிரட்டுவார். அவர் அப்படி கோபமாக நடந்து கொள்ளும் போது தான், மற்றவர்கள் பயந்து தங்களது வேலையை ஒழுங்காக செய்வார்கள்.

பாக்யராஜ் பேட்டி!
பாக்யராஜ் பேட்டி!

அதில் பேசிய அவர், “பாரதிராஜாவுக்கு அது முதல் படம். ஆகையால் தயாரிப்பு தரப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால், அவர்களை நேரடியாக அந்த சமயத்தில் திட்ட முடியாது.

அதனால் உதவி இயக்குநரை திட்டுவது போல திட்டி, தயாரிப்பு தரப்பை மிரட்டுவார். அவர் அப்படி கோபமாக நடந்து கொள்ளும் போது தான், மற்றவர்கள் பயந்து தங்களது வேலையை ஒழுங்காக செய்வார்கள்.

அப்படித்தான் அன்றைய தினம் காலை வழக்கம் போல எழுந்து, சீக்கிரமே வந்து பாரதிராஜாவை எழுப்பி விட்டு விட்டு, எனக்கான வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன். 

ஷூட்டிங் நடப்பதற்காக அனைத்தும் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கரண்ட் வரவில்லை. இதனால் மொத்த ஷூட்டிங்கும் அப்படியே நின்றது. இதை பார்த்த பாரதிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. என்ன நடந்தது என்று பார்த்தால், புரொடக்ஷன் மேனேஜர் அந்த ஊருக்கு கரண்ட் கொடுப்பவருக்கு சரியான மரியாதை கொடுத்து கவனிக்கவில்லை என்பது தெரிந்தது. 

இதையடுத்து அவர் கரண்ட் கொடுப்பதில் குளறுபடி செய்து சென்று விட்டார். இது தெரியாமல் பாரதிராஜா ஸ்ரீதேவி, கமல் முன்னிலையில் என்னை திட்டிவிட்டார் எனக்கு அது பழக்கமில்லை. தவறு செய்தால் நிச்சயமாக திட்டு வாங்கலாம். ஆனால் நான்தான் தவறு செய்யவில்லையே.  

இதை பார்த்தவுடன் எனக்கு அவமானம் ஆகிவிட்டது இதையடுத்து பாரதிராஜாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து,ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பிச் சென்று விட்டேன். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் வந்து சமரசம் பேசி மீண்டும் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு என்னை பார்த்த பாரதிராஜா, பயங்கரமாக கடிந்து ரூமிற்குள் அழைத்துச் சென்றார். அப்போது ஒரு இயக்குனர் ஒரு படபிடிப்பில் உதவி இயக்குனரை எவ்வாறு கையாள்வார், அதனை அவன் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவற்றை எடுத்து சொன்னார். அதன் பின்னர் நான் இனிமேல் நீங்கள் எப்படி திட்டினாலும் நான் செல்ல மாட்டேன் என்று சொன்னேன்.” என்று பேசினார். 

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.