ஒய்.ஜி.மகேந்திரன் அறிமுகம் ..ஒரே வீட்டுக்குள் 9 விதமான மனிதர்கள் 'நவக்கிரகம்'!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒய்.ஜி.மகேந்திரன் அறிமுகம் ..ஒரே வீட்டுக்குள் 9 விதமான மனிதர்கள் 'நவக்கிரகம்'!

ஒய்.ஜி.மகேந்திரன் அறிமுகம் ..ஒரே வீட்டுக்குள் 9 விதமான மனிதர்கள் 'நவக்கிரகம்'!

Karthikeyan S HT Tamil
Sep 03, 2023 06:51 AM IST

53 Years Of Navagraham: நாகேஷ், லட்சுமி நடிப்பில் வெளிவந்த 'நவக்கிரகம்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 53 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

நவக்கிரகம்
நவக்கிரகம்

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ல் வெளியான திரைப்படம் 'நவக்கிரகம்'.

கே.பாலச்சந்தர் இயக்கிய 'நீர்குமிழி', 'எதிர்நீச்சல்' உள்ளிட்ட சில படங்கள் நாடகத்தில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வந்து பெயர் பெற்றன. அந்த வரிசையில் வெளிவந்தது தான் 'நவக்கிரகம்'. சென்னை சபாக்களில் சக்கைபோடு போட்ட காமெடி நாடகத்தை சினிமா பாணியில் உருவாக்கி இருந்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர். இதில், முத்துராமன், நாகேஷ், ஜி.சகுந்தலா, ராகினி, சிவகுமார், சி.கே.சரஸ்வதி, ஒய்.ஜி.மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஒய்.ஜி. மகேந்திரன் இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிப்புலகுக்கு அறிமுகமானார்.

படம் முழுவதும் ஒரு வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டது. 'உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது'..என்ற பாடல் மட்டும் மெரீனா கடற்கரையில் காட்சியாக்கப்பட்டிருந்தது. வி.குமார் இப்படத்துக்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் விதவிதமான குணாதியங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குள் நடக்கும் மோதல், ஈகோ ஆகியவற்றை மையமாக கொண்டு மனித மனங்களை காட்சியாக்கி இருப்பார் கே.பாலசந்தர். நாடகம் பெற்ற அளவுக்கு படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.

இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதாவது 1970-ம் ஆண்டு இதே செப்டம்பர் 3-ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட, 53 ஆண்டுகளை நிறைவு செய்து 54 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது 'நவக்கிரகம்'.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.