தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara: ‘அப்போதே அம்மணி அப்படியாக்கும்..’ - ஐயா படப்பிடிப்பை அதிர வைத்த நயன்! - இயக்குநர் ஹரி சொன்ன சுவாரசியம்!

Nayanthara: ‘அப்போதே அம்மணி அப்படியாக்கும்..’ - ஐயா படப்பிடிப்பை அதிர வைத்த நயன்! - இயக்குநர் ஹரி சொன்ன சுவாரசியம்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 22, 2024 12:05 PM IST

அந்த திரைப்படத்தில் நயன்தாரா ஏற்று நடித்த கதாபாத்திரம், தைரியமாக முடிவுகளை எடுக்கும் கதாபாத்திரமாக எழுதப்பட்டிருக்கும்.

நயன்தாரா
நயன்தாரா

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ஐயா திரைப்படத்தில் ஒரு புது நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துதான் அதற்கான தேடலை தொடங்கினோம். மேலும் அந்த நடிகை, ஏற்கனவே படங்களில் நடித்தவராக இருக்கக் கூடாது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டோம். 

அந்த சமயத்தில் தான் இரண்டு படங்கள் நடித்த ஒரு நடிகையின் புகைப்படமோ, வீடியோவோ, ஏதோ ஒன்று எங்களிடம் வந்து சேர்ந்தது. அதை பார்த்தவுடன் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

இதையடுத்து, நாங்கள் அவரை நேரில் பார்த்தோம். நேரில் பார்த்தவுடன், இவர் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததோடு அப்போழுதே அவரை கமிட்டும் செய்து விட்டேன். அவர்தான் நயன் தாரா. 

அந்த திரைப்படத்தில் நயன்தாரா ஏற்று நடித்த கதாபாத்திரம், தைரியமாக முடிவுகளை எடுக்கும் கதாபாத்திரமாக எழுதப்பட்டிருக்கும். 

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அந்த படத்தில் கதாநாயகனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த கதாபாத்திரம் +2 - வில் ஃபெயில் ஆகும். 

அப்பொழுதே அந்த கதாபாத்திரம் அப்படியான ஒரு முடிவை எடுக்கும். அப்படியான ஒரு கதாபாத்திர பிரதிபலிப்பு, அப்பொழுதே நயன் தாராவிடம் எனக்குத் தெரிந்தது. 

சாதிக்க வேண்டும் என்ற வெறி

அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அதனால் தான் அவர் இன்று இந்த நிலையில் இருக்கிறார். அப்பொழுதே நயன்தாரா பெரிய நடிகையாக வருவார் என்பதை யூகித்தேன். 

ஆனால் இவ்வளவு பெரிய இடத்தை அடைவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்ததுதான். அவரிடம் இருக்கும் திறமையையும், காலச் சூழ்நிலையையும் தாண்டி, அவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது தொடர்ந்து உழைத்ததனால் மட்டும்தான். அவரிடம் எவ்வளவு உழைப்பார் என்பதை மட்டும் நான் அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.  

இன்னொன்று, நயன்தாராவிற்கு மிகவும் கோபம் வரும். முதல் படமான ஐயா திரைப்படத்திலேயே, அவர் அப்படி கோபப்பட்டு இருக்கிறார். ஆனால் எல்லாமே வேலை சம்பந்தமாக மட்டுமே இருக்கும். 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், முதல் படத்திலேயே, காஸ்டியூம் சரியில்லை, அது சரியில்லை இது சரியில்லை என்று சாடினார். 

அப்போது எனக்கு முதல் படத்திலேயே இந்த நடிகை இவ்வளவு கறாராக இருக்கிறாரே என்பதில் எனக்கு ஆச்சரியம் இருந்தது. நான் அப்போது அருகில் இருந்தவரிடம், இப்பொழுதே இந்த பொண்ணுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே என்று  சொன்னேன். அதன் பின்னர் நான் சென்று, அவருக்கான பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்தேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்