Gautham Menon: 'இதெல்லாம் தேவையே இல்லாத படம்.. யாருக்கும் இதுல விருப்பம் இல்ல.. '- கௌதம் மேனன்
Gautham Menon: மக்களை இரண்டாக பிரிக்கும் சாதியப் படங்கள் எல்லாம் தற்போது தேவையே இல்லாத ஒன்று என இயக்குநர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.

Gautham Menon: தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு ஜானர்களில் கதை சொல்வதில் வல்லவர்கள். உதாரணமாக, மணிரத்னம் புராண கதைகளை இன்றைய சூழலுக்கு தகுந்த மாதிரி படமாக எடுப்பார், ஷங்கர் லஞ்சம், ஊழலுக்கு எதிரான படங்களை எடுப்பார்.
கௌதம் மேனன், அதிரடி ஆக்ஷன் கலந்த காதல் கதையை எடுப்பார், பாலா சமூகத்தில் உள்ள அவலங்களை படமாக எடுப்பார், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் சாதிய பிரச்சனைகளை படமாக எடுப்பர்.
கௌதம் மேனனின் பார்வை
இப்படி ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாதை உள்ள நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சாதிய படங்கள் குறித்த தன்னுடை கருத்தை முன் வைத்துள்ளார்.
பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், "எனக்கு இந்த படங்களை எல்லாம் குறை சொல்லனும்ன்னு ஒன்னும் இல்ல. சாதியை வைத்து மக்கள 2 தரப்பா பிரிக்குற மாதிரியான படங்கள் மேல எனக்கு உடன்பாடு இல்லை.
தேவை இல்லாத ஒன்று
ஏன்னா, அது இன்னைக்கு இல்லன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த காலகட்டத்த வச்சு அவங்களால படம் பண்ண முடியாது. அதுனால தான் அவங்க 80 களிலோ அல்லது 90களிலோ கதை நடப்பதா காட்டுறாங்க. இது ரொம்பவே அதிகப்படியான காட்சிகளை வெளிப்படுத்தும்ன்னு எனக்கு தோணுது.
இந்த மாதிரி கதைகளோ படங்களோ இந்த காலக்கட்டத்துக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லன்னு நான் நினைக்குறேன். அதை இப்போ நாம பண்ணவும் முடியாது. அதுனால தான் இன்னமும் பழைய கதையையே சொல்லிட்டு இருக்கோம். அதுமட்டும் இல்லாம சாதி பத்தின அந்த பாதைய இப்போ யாரும் தேர்ந்தெடுக்கவும் இல்ல. இன்னைக்கும் நம்மளால அதே உணர்வோட ஒரு படம் பண்ண முடியாதுங்குறது தான் உண்மை" எனக் கூறினார்.
என் முழு பெயர் அதுதான்
முன்னதாக, தன் பெயரில் உள்ள குடும்ப அடையாளத்தை ஏன் தொடர்ந்து எடுத்து வருகிறேன் என்பது குறித்தும் பேசி இருப்பார். அப்போது. "என் முழு பெயர் கௌதம் வாசுதேவ் மேனன். நான் பிறந்த சமயத்தில் எனக்கு வைத்த பெயர் அது. நான் பள்ளி தொடங்கி கல்லூரி முடிக்கும் வரை அந்த பெயர் தான் பயன்படுத்தினேன். வாசுதேவ் என் அப்பா பெயர் அல்ல. அவர் பெயர் பிரபா கிருஷ்ணன்.
குடும்ப அடையாளம் அல்ல
நான் மின்னலே படம் எடுக்கும் சமயத்தில் தயாரிப்பாளர் என் பெயர் சின்னதாக இருக்க வேண்டும் எனக் கேட்டதால் தான் கௌதம் என பெயர் போட்டேன். நான் ஒரு படம் முழுவதுமாக என் கட்டுப்பாட்டில் இருக்கும் போது என் முழு பெயரையும் பயன்படுத்தலாம் என நினைத்து வாரணம் ஆயிரம் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் என்ற என் முழு பெயரை பயன்படுத்தினேன். அத்துடன் அந்தப் படம் என் அப்பாவை மனதில் வைத்து எடுத்த படம். மற்றபடி, குடும்ப அடையாளத்தை சுமந்து வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல. என் முழு பெயரே கௌதம் வாசுதேவ் மேனன் தான் எனக் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்