Gautham Menon: 'நான் விளையாட்டா தான் சொன்னேன்.. அது நான் தயாரிச்ச படம்'- கௌதம் மேனன்
Gautham Menon: எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி நான் விளையாட்டாக பேசிய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக இயக்குநர் கௌதம் மேனன் விளக்கமளித்துள்ளார்.

Gautham Menon: தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவரது ஒவ்வொரு படத்திலும் வரும் காதல் காட்சிகளும், பெண்களை அவர் வர்ணிக்கும் விதமும், படத்தின் பாடல்களும் தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதே இல்லை.
அப்படிப்பட்ட இயக்குநர் சில ஆண்டுகளாக, பொருளாதார சிக்கல்களால் படம் எடுப்பதை தவிர்த்து படங்களில் நடித்து வந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து டோம்னிக் அண்டு தி லேடிஸ் பர்ஸ் எனும் படத்தை இயக்கினார்.
எனை நோக்கி பாயும் தோட்டா
இந்தப் படத்தின் புரொமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனை நோக்கி பாயும் தோட்டா தன்னுடைய படம் அல்ல என்றும். அந்தப் படத்தில் உள்ள பாடல் ஒன்று மட்டும் தான் எனக்கு நியாபகம் உள்ளது எனக் கூறியிருப்பார்.
இவரது இந்த பேட்டி வைரலான நிலையில், பலரும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்தும், அப்படத்தின் நாயகன் தனுஷ் குறித்தும் பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசு பொருளானது.
நான் விளையாட்டாக சொன்னேன்
இந்த சமயத்தில் தான் இயக்குநர் கௌதம் மேனன் சினியுலகம் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்து, எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து பேசியிருக்கிறார்,
அந்தப் பேட்டியில், " எனை நோக்கி பாயும் தோட்டா படம் என்னுடையது இல்லைன்னு நான் விளையாட்டாக தான் சொன்னேன். அத சொல்லும் போது நான் சிரிச்சிட்டு இருந்தேன். அதுமட்டும் இல்லாம இந்தப் படம் என்னோட சொந்தப் படம். இத நான் தான் தயாரிச்சேன்.
5- 10 நாள் தான் ஷூட் பண்ணோம்
என்னோட கெரியர்லயே இந்த படத்த மட்டும் தான் நான் நெனச்ச மாதிரி எடுக்க முடியல. 20 நாள்ல பண்ண வேண்டிய வேலைய இந்த படத்துல நான் 5- 10 நாள்ல பண்ணேன். அதுக்காக நான் சொன்ன விஷயத்த எல்லாரும் வேற மாதிரி கொண்டு வந்துட்டாங்க. என் போன்ல எந்த சோசியல் மீடியா அக்கவுண்ட்டும் இல்ல. ஆனா ஆபிஸ் வரும் போது எல்லாரும் என்கிட்ட இதபத்தி கேக்குறாங்க. நான் நடிகன் தான்ய. ஆனா இதபத்தி சொல்லும் போது நான் நடிக்கல.
நான் தான் புரொடியூஸ் பண்ணேன்
இந்த படத்த வேற ஒரு புரொடியூசர் காசு கொடுத்து அந்த படத்த நான் என்னோட படம் இல்லன்னு சொல்லி இருந்தா தான் அது தப்பு. இந்த படத்த புரொடியூஸ் பண்ணுனதே நான் தான். அந்த படத்த ரிலீஸ் பண்றதுக்கு ஐசரி கணேஷ் சார்கிட்ட 3 படம் பண்ண ஓகே சொல்லி தான் இந்த படத்த ரிலீஸ் பண்ணேன்.
நிறைய பிரச்சனை
அந்த படத்தால என மனநிறைவே இல்ல. முதல் பாதி மட்டும் தான் திருப்தியா எடுத்தேன். என்னால 2வது பார்ட் சரியா எடுக்க முடியல. இந்த படம் பண்ணும் போது நிறைய பிரச்சனை. தனுஷ் வடசென்னை படம் பண்ண போயிட்டாரு. அவருக்கும் புரொடியூசருக்கும் பிரச்சனை. 20 நாள் தான் டைம் இருக்கு. அதுக்குள்ள படத்த எடுத்து முடிங்கன்னு சொல்லிட்டாரு.
இந்த படத்த எடுத்ததுக்கு அப்புறம் கூட நாந் ரிலீஸ் பண்ணாம இருந்திருக்கலாம். ஆனா படம் ரிலீஸ் ஆகணும்ன்னு நெனச்சேன்" எனக் கூறி எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து உலாவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்